UPSC Recruitment 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கழகத்தில் வேலை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 16, 2020

UPSC Recruitment 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கழகத்தில் வேலை!

UPSC Recruitment 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கழகத்தில் வேலை!
மத்திய அரசிற்கு உட்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கழகத்தில் (EPFO) காலியாக உள்ள கணக்கு அதிகாரி உள்ளிட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் (UPSC) வெளியிடப்பட்டுள்ளது. எந்தத் துறையில் பட்டம் பெற்றவராக இருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
மேலாண்மை : மத்திய அரசு
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)
மொத்த காலிப் பணியிடம் : 421
பணிகள் : என்போர்ஸ்மென்ட் ஆபிசர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவு
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம் மற்றும் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 25 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.




விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in/sites/default/files/SplAdvt-51-2020-Engl.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post Top Ad