
மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பூமியைச் சுற்றி வரும் புதிய, 'குட்டி நிலவு' ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப்...