40 வயதை நெருங்குபவர்களா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு!
20 முதல் 3 0வயதிற்குள் உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பருவத்தில்தான் அதிக உடல் எடையை குறைக்கவும் உடல் ஒத்துழைக்கும். ஆனால் 40 வயதிற்கு மேல் உடல் எடை குறைப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. ஏனெனில் , 40 வயதிற்கு மேல் மெட்டபாலிசம் தொடர்பான ரசாயனங்களின் சுரக்கும் அளவு குறைவதால், அதிக கலோரிகளை எரிக்க முடியாமல் போகிறது. சரி 40 வயதிற்கு மேல் எந்ததெந்த வழிகளில் ஆரோக்கியத்தை பேன முடியும், என பார்க்கலாம்.
பெரும்பாலும் 40 வயதிற்கு மேல் உடல் பயிற்சி என்பது குறைந்து விடுகிறது. இதனால் தசைகளில் சுருக்கம் ஏற்படுகிறது. எனவே முடிந்த வரை உடற்பயிற்சி செய்யவேண்டும்.
40 வயதிற்கு மேல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் , சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கண்டிப்பாக புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஜங் புட் சாப்பிடுதலை தவிர்த்து விட வேண்டும்.
40 வயதிற்கு மேல் சிறு நீர் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால், முடிந்தவரை அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
மனம் மற்றும் உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருப்பது மிகவும் அவசியம் . ஆகவே சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான பொறுப்புகளை தவிர்ப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேல் அதிகமான உடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளாதால் . முழு உடல் பரிசோதனை மிகவும் அவசியம்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
பாதாம், அதிகம் நல்ல கொழுப்புகளை கொண்டுள்ளதால், பாதாமை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
ஃபைபர் நிறைந்த உணவுகளான முட்டைகோஸ், ப்ரோகலி, பீட்ரூட், போன்ற காய்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
40 வயதிற்கு மேல் கண் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், எனவே கேரட்டை அதிகமாக சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் ஏ நிறைந்திருப்பதினால் கண்ணிற்கும், சருமத்திற்கும் நல்ல பலனை தரும்.
சியா விதைகளில் ஃபைபர் மற்றும் ஒமேகா 3 அதிகளவு உள்ளதால், இதயத்தை பாதுகாப்பதற்கான சிறந்த உணவாக இருக்கும். எனவே 40 வயதிற்கு மேல் சியா விதைகளை போதுமான அளவு தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கான ஆன்டி - ஆக்ஸிடண்ட் பெர்ரிஸ்களில் நிறைந்திருப்பதால். ரெஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை தினமும் எடுத்துகொள்ள வேண்டும்.
இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளை கட்டுப்படுத்த உதவும் ஓட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
தினை ஒரு சிறந்த தானிய வகையை சார்ந்த உணவு . ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும்.
புரதம் மற்றும் ஃபைபரை அதிக அளவு கொண்டுள்ளது. நல் ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் பொருட்டு 40 வயதிற்கு மேல் கண்டிப்பாக இந்த தானிய வகைகள் உணவு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.