5,8 பொது தேர்வு கண்காணிப்பு பணி மற்றும் மதிப்பெண் பதிவேற்றம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் வினாத்தாள் தயாரித்து வழங்கப்படும். ஒரு பள்ளியின் ஆசிரியர்களை பிற பள்ளிக்கு மாற்றி பொதுத்தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கான பதிவேட்டில் மட்டுமே மதிப்பெண்கள் குறிப்பிடப்படும். இவற்றை பெற்றோர் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.