8ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை அறிவிப்பு.
'எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரலில் நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள், ஜனவரி, 27 முதல், 31 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும், 10 முதல், 12ம் தேதி வரை, தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு சென்று, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம், 125 ரூபாய், சிறப்பு கட்டணம், 500 ரூபாய், ஆன்லைன் பதிவுக்கு, 50 என, மொத்தம், 675 ரூபாய் கட்டணத்தை, சேவை மையங்களில் செலுத்தலாம்.
இது குறித்த விரிவான விபரங்களை, தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற,இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.