டெல்லியில் கல்வித்துறை நாட்டிலேயே முதன்மை பெற்று விளங்க காரணம் என்ன?
நீண்ட காலமாகவே நம் நாட்டில் கல்வி இரண்டு வழிகளில்தான் போதிக்கப்படுகிறது . ஒன்று , மேல்தட்டு வர்க்கத்துக்கு , இன்னொன்று , பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு , இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று ஆஆக தீர்மானித்தது . தரமுள்ள கல்வி என்பது ' அவசியமானது ' ஆடம்பரமானது ' அல்ல என்று ஆக உறுதியாக நம்பியது .
எனவே , ஐந்து அம்சம் உள்ளதாக அந்தக் கல்வி முறையை வடிவமைத்தது , அதற்கு டெல்லியின் மொத்தச் செலவில் 25 % - ஐ அதற்கு மட்டுமே ஒதுக்கியது . இந்த மாதிரி வெற்றியடைந்து மக்களால் ஏற்கப்பட்டிருப்பதால் , அடுத்தகட்டச் சீர்திருத்தங்களுக்கு இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது , முக்கியமான அம்சங்கள் டெல்லி கல்வி மாதிரியின் முதலாவது அம்சம் , பள்ளிக்கூடத்தின் அடித்தளக் கட்டமைப்பை அடியோடு மாற்றியமைப்பது .
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற கட்டிடங்களும் குடிநீர் , கழிவறை , மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிக்கூட வளாகங்கள் அரசின் அலட்சியத்தை மட்டும் காட்டவில்லை , அங்கு மாணவர்களுக்கு நன்றாகக் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையை ஆசிரியர்களிடமும் , நன்றாகப் படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்களுக்கும் உருவாக்கவில்லை.
முதலில் இதை மாற்ற காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள பெரிய வகுப்பறைகளும் , வகுப்பறையின் உட்புற வடிவமைப்பு கல்வியை உற்சாகமாகக் கற்கும் மனநிலையையும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டன , பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு , புதிய கட்டிடம் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்குப் பல அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன , பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமர தரமான அறைக்கலன்கள் வழங்கப்பட்டன.
கணினியுடன் இணைந்த நவீன ஸ்மார்ட் பலகைகள் , ஆசிரியர்கள் இளைப்பாறவும் , பாடங்களை நடத்தும் உத்திகள் தொடர்பாகத் தங்களுக்குள் விவாதிக்கவும் நல்ல வசதிகள் நிறைந்த அறைகள் , கலையரங்கம் , ஆய்வுக்கூடங்கள் , நூலகம் , விளையாட்டுகளுக்கான திடல் , குடிநீர் , உணவருந்த கூடம் ஆகியவையும் புதிதாக உருவாக்கப்பட்டன , இரண்டாவதாக , ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் , சிங்கப்பூரில் உள்ள தேசிய கல்விக்கழகம் , அஹமதாபாதில் இந்திய மேலாண்மையியல் கழகம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் தனித்தனிக் குழுக்களாகச் சிறப்புப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டனர் . இதனால் , ஆசிரியர்களிடம் கற்பிக்கும் திறன் மேம்பட்டதுடன் தலைமைப் பண்பும் வளர்ந்தது . மூன்றாவதாக , பள்ளி நிர்வாகக் குழுக்களில் மாணவர்களின் பெற்றோர்கள் தீவிரமாகவும் பயனுள்ள வகையிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
எல்லாப் பள்ளிகளிலும் மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன , ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்டுதோறும் ரூ . 5 - 7 லட்சம் வரை ஒதுக்கப்பட்டது . குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர் இல்லையென்றால் , படித்தவர்களை வெளியிலிருந்து மாதச் சம்பளத்துக்குத் தற்காலிகமாக அமர்த்திக்கொள்ளக்கூட இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.
பெற்றோர்களை ஆசிரியர்கள் எப்போது , எதற்காக , எப்படி அணுக வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டன . இந்தக் கூட்டங்களுக்கு வருமாறு பெற்றோரை டெல்லி பண்பலை வானொலி ஒலிபரப்புகள் மூலமும் பத்திரிகைகள் , இணையதளங்கள் வழியாகவும் அழைப்புவிடுத்தனர் .
நான்காவதாக , மாணவர்களுக்குக் கற்றுத்தரும் பாட முறைகளிலும் , மாணவர்கள் பயிலும் பாடத்திட்டங்களிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன , 2016 - ல் அரசுப் பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்பு மாணவர்களில் 50 % பேர் பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியடைந்தனர் . தொடக்கக் கல்வியில் இருந்த குறைகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அடிப்படைத் திறன் குறைவால்தான் இந்தத் தோல்வி என்பதை டெல்லி அரசு உணர்ந்தது . எல்லாக் குழந்தைகளுமே நன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்கவும் , பிழையின்றி எழுதவும் , அடிப்படையான கணக்குகளை எளிதாகப் போடவுமான பயிற்சிகளை வழக்கமான பாடங்களுடன் சேர்த்து நடத்துவதற்குச் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டது.
நர்சரி வகுப்பு தொடங்கி எட்டாவது வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சிப் பாடத்திட்டம் ' அறிமுகப்படுத்தப்பட்டது . ஒன்பதாவது முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கென ' தொழில் முனைவோர் மனநிலைக்கான பாடத்திட்டம் ' உருவாக்கப்பட்டது . இவ்விரண்டுடன் மாணவர்கள் இப்போது பயின்றுவரும் பாடங்களில் மேலதிகக் கவனத்தைச் செலுத்தி பயிற்றுவித்ததால் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது.