எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றி வணங்க வேண்டும்?
சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவது ஆத்ம பிரதட்சிணம் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்
சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும்.
பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.
முருகப்பெருமான் மற்றும் லட்சுமி தாயார் சந்நிதி, அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை வலம் வர வேண்டும்
அரசமரத்தை வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமரத்தை பகல் நேரத்தில் மட்டுமே வலம் வர வேண்டும்
நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும்
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.