தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள். சில செய்யக்கூடாதவைகள்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 16, 2020

தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள். சில செய்யக்கூடாதவைகள்!

தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள். சில செய்யக்கூடாதவைகள்!


1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும்.

2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.

3. பெண்கள் காலையில் முதலில் வீட்டு கதவை திறக்கும் பொழுது அஷ்டலக்ஷ்மிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறந்தால் அஷ்டலக்ட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவர். (ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஸந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி )

4. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் தண்ணீரும் வழங்க வேண்டும். அவங்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

5. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்போதும் குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

6. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.

7. மூன்றாம் பிறைச் சந்திரனை காண்பது சிறப்பு.

8. இரவில் துணி துவைக்க கூடாது. குப்பையை வெளியில் கொட்டவும் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. இரகசியம் பேச கூடாது.

9. வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது.

10. நகத்தை பல்லால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள்.

11. அடிக்கடி கை விரல்களை நெறித்து கொள்பவர்களிடம் கொடூரம், தாரித்ரியமும் வாசம் செய்யும்.

12. துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம் படாமல் உரிக்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ, தரையிலோ வைத்து துண்டிக்க கூடாது.

13. நம் ஊர் அல்லது வீட்டிற்கு பின்புற வழியாக வெளியே போகக்கூடாது. தாட்சாயணி தேவி அப்படி செய்ததால் யாகமும் அழிந்து தன் உடலையும் விட்டாள். இதை மக்களுக்கு எடுத்துக்காட்டவே செய்தாள்.

14. தூங்குபவர்களை எழுப்புவது மஹா பாவம். இந்த்ரியங்கள் எல்லாம் மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனந்திரிந்து கண், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக நேரும்.

15. பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், பலகை, படுக்கை, ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.

16. கிரஹணம் தவிர மற்ற நாட்களில் இரவில் ஸ்நானம் செய்ய கூடாது. அவசியம் நேர்ந்தால் தீபத்தை நீரில் காட்டி ஸ்நானம் செய்யலாம்.

17. மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு , பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோஷம் இல்லை.

18. ஹோமப்புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்பிணி பெண்கள் மீது ஹோமப்புகை படக்கூடாது.

19. அக்நிஹோத்ரம், தமது வயல், வீடு, கோவில், கர்ப்பவதி, வயதானவர், குரு, ராஜா இவர்களிடம் வெறுங்கையுடன் செல்லாமல் அவர்களுக்கு உகந்ததை கொண்டு செல்ல வேண்டும். குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து குபேரரானார்.

20. பசுவின் பின்புறத்தையும், இரண்டு கொம்புகளுக்கு இடையிலும் தரிசிக்க வேண்டும்.

21. அன்னம், நெய், உப்பு இவற்றை கையால் பரிமாறுதல் கூடாது. கையால் பரிமாறப்படும் அன்னம், நெய், உப்பு ஆகியவை பசு மாமிசத்துக்கு சமம் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

22. தூறல் போடும் போது ஒரு சுபகாரியத்திற்கு புறப்படக் கூடாது.

23. வீட்டில் குப்பையை கூட்டும் போது உடனே வெளியில் அள்ளிப் போட வேண்டும். அப்படியே குவித்து வைக்கக் கூடாது.

24. பழங்கள், நிலக்கடலை, கரும்பு சாப்பிட்டு விட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது.

25. மாலை 6 மணிக்கு மேல் தீபம் வைத்த பின் யாருக்கும் தர்மம், கடன், தானியம், பால், மோர், உப்பு, நவரத்தினம், போன்ற பொருள்களை கொடுக்கக் கூடாது. பண்டமாற்று முறையில் கொடுக்கலாம்.

26. மாலை 6 மணி அளவில் நம் வீட்டின் பின் கதவை மூட வேண்டும்.

27. தூங்கும் குழந்தையைத் தூளியோடு சேர்த்து அடுத்த அறைக்குக் கொண்டு செல்லக் கூடாது.

28. குழந்தை பிறந்த வீட்டில் புதுமணத் தம்பதிகள் இருந்தால், அவர்கள் குளித்துவிட்டுத் தான் குழந்தையைத் தொட வேண்டும்.

29. கர்ப்பிணி பெண்கள் வாயிற்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் பிரசவம் சிக்கலாக இருக்கும்.

30. திருமணமான பெண்கள் கையில் வளையல் இல்லாமல் நெற்றியில் பொட்டு இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது.

31. கை குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றால் குழந்தையை புதுமணத் தம்பதிகளிடம் கொடுத்து வாங்க வேண்டும்.

32. பாலை அடுப்பில் பொங்க விடக் கூடாது.

33. தீபாவளி தவிர பிற நாளில் அதிகாலை என்னை தேய்க்க கூடாது.

34. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது.

35. சாமிக்கு நிவேதனம் ஆகும் சமயம் பார்க்க கூடாது.

36. சுவாமி சிலைகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்ற கூடாது.

37. சாலையில் செல்லும் போது தம்பதிகளுக்கு இடையில் போக கூடாது.

38. தேவதை, பலிபீடம், இவற்றின் நடுவே செல்லுதல் கூடாது.

39. சிவலிங்கம் நந்திக்கு இடையில் செல்ல கூடாது.

40. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும். முடிந்தால் புதியதாக வாங்கி கொடுக்கலாம். (இவற்றை அறியாமல் செய்த பலர் இன்றும் லக்ஷ்மி கடாக்ஷம் விலகி துன்பப்பட்டு வருகின்றனர். நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். “சரி தெரியாமல் செய்துவிட்டோம். இனி என்ன செய்வது?” என்று கேட்பவர்களுக்கு மட்டும் உரிய பரிகாரத்தை தனிப் பதிவில் விளக்குகிறோம்.)

41. சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.

42. சுப காரியத்திற்கு செல்லும் போது வடக்குத்திசை, கிழக்குத்திசை நோக்கிச் செல்ல வேண்டும்.

43. தினசரி காலையில் சூரியனையும், தாய், தந்தையையும் வணங்க வேண்டும்.

44. சுபகாரியம் தொடங்கும் முன் நம் குலதெய்வத்தை முதலில் வணங்க வேண்டும்.

45. நமது மூதாதையர் (முன்னோர்கள்) களை வணங்கிப் பின் சுபகாரியம் தொடங்குவது நல்லது.

46. கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் விருத்தி. மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வ விருத்தி. தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் வளரும். தினசரி தெய்வத்தை வழிபட்டு உணவு அருந்துதல் எல்லா நன்மைகளும் விளையும்.

47. சூரியனை கிரகணத்தின் போதும், நீரில் சூரியன் பிரதிபலிக்கும் போதும், நடுவானில் (உச்சியில்) இருக்கும் போதும் பார்க்கக்கூடாது.

48. கோலம் என்றால் அழகு என்று பொருள். கோலம் போட்ட வீட்டில் துர்தேவதைகள் நுழையாது. எனவே காலையிலும் மாலையில் சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

49. தீபத்தை தெற்கு திசையில் மட்டும் ஏற்றவேகூடாது.

50. திருமணமான கிரகஸ்தர்கள் தான் அரக்கு, பச்சை, காவி, போன்ற நிறங்களில் வேஷ்டி அணியலாம். பிரம்மச்சாரிகள் வெள்ளை நிற வேட்டியையே அணியவேண்டும். மேலும் யாரும் வெறும் வேட்டியை மட்டும் அணியக்கூடாது. மேலே அங்க வஸ்திரம் அல்லது துண்டு அணியவேண்டும்.

Post Top Ad