முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
திருவள்ளுவர் ஆண்டு 2051 , விகாரி வருடம் தை மாதம் ந . க . எண் . 1386 / « 1 / 2020 நாள் . 09 . 02 . 2020
பொருள் : பள்ளிக் கல்வி - கடலூர் மாவட்டம் - முதுகலை ஆசிரியர் பணியிடம் - கலந்தாய்வு மூலம் ஆணை வழங்குதல் - தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் - சார்பு .
பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 0352 / டபிள்யு 3 / 2019 நாள் . 05 . 02 . 2020 * * * * * * பார்வையில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகளுக்கிணங்க ,
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு EMIS இணையதளம் மூலம் 09 . 02 . 2020 மற்றும் 10 . 02 . 2020 ஆகிய இரு நாட்களில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பாட வாரியாக கலந்தாய்வு நடைபெற்றுள்ளது .
பணி நியமனம் பெற்ற ஆசிரியர் பணியில் சேர வருகை புரியும்போது சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியரின் பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள 1 முதல் 14 வரையிலான நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றப்பட்ட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகள் பெற்ற ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின்படி 12 . 02 . 2020 அன்று பணியில் சேர வேண்டும் .
எக்காரணத்தை முன்னிட்டும்
12 . 02 . 2020க்கு முன்னர் பணியில் சேர அனுமதித்தல் கூடாது என அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
ஓம் / - கா . ரோஸ் நிர்மலா முதன்மைக் கல்வி அலுவலர் கடலூர்.