நெஞ்சை அள்ளும் தஞ்சை நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள் கண்காட்சி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 9, 2020

நெஞ்சை அள்ளும் தஞ்சை நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள் கண்காட்சி

நெஞ்சை அள்ளும் தஞ்சை நாணயங்கள், பணத்தாள்கள், தபால்தலைகள் கண்காட்சி

















திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் நெஞ்சை அள்ளும் தஞ்சை தலைப்பில்  பணத்தாள்கள் நாணயங்கள் தபால்தலைகள் கண்காட்சி திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

 திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். அசோக் காந்தி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 ரூபாய் பணத்தாளை வெளியிட்டது. அதில் தஞ்சை பிரகதீஸ்வரர் திருக் கோவிலின் வியத்தகு தோற்றம் அச்சிடப்பட்டது.
 ரிசர்வ் வங்கியின் நான்காவது ஆளுநரான ராமராவ் கையெழுத்திட்டுள்ளார். டெல்லி, மும்பை, கொல்கத்தா ,சென்னை, கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்பட்டன.  1000 ரூபாய் பணத்தாள் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
ஆயிரம் ரூபாய் வெள்ளி நாணயம் தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில் ஆயிரம் ஆண்டிற்காக வெளியிடப்பட்டது. புழக்கத்திற்காக 5 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டது காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் தமிழர் வரலாற்றை சோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன.
சங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் சதுரம், நீண்ட சதுரம், வட்டம் போன்ற வடிவங்களில் வெளியிட்டுள்ளனர்.
பிற்காலச்சோழரில் முதலாம் ராஜராஜன் தன் ஆட்சிகாலத்தில் பல துறைகளிலும், பலவித புதுமைகளைப் புகுத்தியதுபோல் காசுகளை வழக்கில் கொண்டு வருவதிலும், பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார்.  தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-104) காலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178 -1218) காலம் வரை கிடைக்கின்றன. முதலாம் ராஜராஜனின் வெற்றிகளால் சோழப் பேரரசு உருவாகியது. அத்துடன் சோழர் காசுகள் பேரரசு முழுவதிலும், அப்பேரரசின் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் நாடுகளிலும் பரவின. சோழ நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளிலும் பரவின. ஆயினும் சோழ நாட்டின் பல பகுதிகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு சோழர் காசுகள் இருந்தன. தமிழகம் முழுவதும் இன்றும் அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஒரே காசு ராஜராஜனின் செப்புக்காசுகளாகும். வேறு எந்த மன்னர்களுடைய காசுகளும் தமிழகம் முழுவதும் கிடைக்கவில்லை ராஜராஜன் வெளியிட்ட காசில் உள்ள நாகரி எழுத்துக்கள் இதே கால கட்டத்தில் வடமாநிலங்களில் ஆட்சி செய்த மன்னர்கள் வெளியிட்ட காசுகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன என முகமது சுபேர் நாணயங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு சிறப்பு அஞ்சல் முத்திரை , முதல் நாள் உறை ,நினைவார்த்த அஞ்சல் தலை, புகைப்பட அஞ்சல் அட்டை என இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என விஜயகுமார் விவரித்தார்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்து பயண சீட்டிலும் சோழன் போக்குவரத்து கழகம் செயல்பட்டு பயணச்சீட்டு வழங்குவதை பயணச்சீட்டு சேகரிப்பாளர் சாமிநாதன் எடுத்துரைத்தார்.  கமலக்கண்ணன், மன்சூர், ராஜேஷ், இளங்கோவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக அப்துல் அஜீஸ் வரவேற்க சந்திரசேகரன் நன்றி கூறினார்

Post Top Ad