ஜிஎஸ்டி லாட்டரி வருகிறது! மத்திய அரசு முடிவு!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 4, 2020

ஜிஎஸ்டி லாட்டரி வருகிறது! மத்திய அரசு முடிவு!!

ஜிஎஸ்டி லாட்டரி வருகிறது! மத்திய அரசு முடிவு!!

மக்கள் தாங்கள் வாங்கும் பொருள் களுக்கு கட்டாயம் பில் பெறும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி பரிசு திட்டத்தை (லாட்டரி) அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பரிசுத் தொகை ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியத்தின் உறுப்பினர் ஜான் ஜோசப், தொழில் வர்த்தக கூட்டமைப்பான அசோசேம் கூட் டத்தில் பேசுகையில், வாடிக்கையாளர்கள் பெறும் ஒவ்வொரு பில்லிலும் பரிசு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என்றும், இதன் மூலம் வர்த்தகர்கள் உரிய காலத்தில் வரி செலுத்தவும் இது ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ஒவ்வொரு பில்லிலும் பரிசுக்கான எண்கள் இருக்கும். அதன்படி ஜிஎஸ்டி பரிசுத் தொகை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 28 சதவீதம் வரியை சேமிப்பதற்காக பில் பெறாமல் வாடிக்கையாளர்கள் போனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1 கோடி அல்லது ரூ.10 லட்சம் பரிசை இழக்க நேரலாம் என்று அவர் கூறினார்.
இப்போது உருவாக்கப் பட்டுள்ள திட்டத்தின்படி ஒவ் வொரு ஜிஎஸ்டி பில்லுக்கான பரிசு கூப்பன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அது குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து குலுக்கல் நடைபெறும். அதன்படி அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசு அறிவிக்கப்படும். தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு நிலைகளில் விதிக்கப்படுகிறது. இது தவிர ஆடம்பர பொருள்கள், புகையிலை, மதுபானம் உள்ளிட்ட பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர் மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்களுடன் இது குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த பரிசுத் தொகைக்கான நிதியை நுகர்வோர் நல நிதியிலிருந்து வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பை தவிர்க்கும் போக்கை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. க்யூஆர் கோட் அடிப்படையிலான ஜிஎஸ்டி பரிவர்த்தனைக்கும் இந்த லாட்டரி பரிசு முறையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோசப் கூறினார்.
ஜிஎஸ்டி வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளும் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளனர். அதில் பரிசுத் தொகை வழங்கும் திட்டமும் ஒன்றாகும். அதேபோல வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Post Top Ad