முதுகலை பட்டதாரிகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியது!!
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 , 150 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஞாயிறு தொடங்கியுள்ளது . முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது . ஒரு லட்சத்து 46 , 000பேர் பங்கேற்ற இந்த தேர்வில் , தரவரிசை அடிப்படையில் , 3 , 833 பேருக்கு நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது .
அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது . அவர்களுக்கு , இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான 2 நாள் கலந்தாய்வு , அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று தொடங்கியது . தமிழ் , ஆங்கிலம் , வணிகவியல் , பொருளியல் , அரசியல் அறிவியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது . கணிதம் , இயற்பியல் , தாவரவியல் , விலங்கியல் , உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது .