மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவிகள் பரிசு பெற்று சாதனை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியம் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, முதல் மூன்று பரிசுகளையும் சிறப்புப் பரிசுகளையும் பெற்றனர்..
பரிசு பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் செல்வி.தேவதிலகா மற்றும் ஊக்கம் அளித்த பள்ளி ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் திரு.தங்கராஜ் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்