வினாடி - வினா போட்டியின் மூலம் 'நாசா' செல்லும் வாய்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, February 7, 2020

வினாடி - வினா போட்டியின் மூலம் 'நாசா' செல்லும் வாய்ப்பு

வினாடி - வினா போட்டியின் மூலம் 'நாசா' செல்லும் வாய்ப்பு
சென்னை : 'தினமலர் - பட்டம்' இதழ் நடத்திய, வினாடி - வினா இறுதி போட்டியில், சென்னை அருகே, செம்பாக்கத்தில் உள்ள, சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர், முதல் பரிசை தட்டிச் சென்று, அமெரிக்காவில் உள்ள, 'நாசா' செல்லும் வாய்ப்பை பெற்றனர். 'தினமலர் - பட்டம்' இதழின் மெகா வினாடி - வினா போட்டி, சென்னை மண்டலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 153 பள்ளிகளில் நடந்தது; 43 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும், தலா, இரண்டு பேர் உள்ள ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு, நேற்று இறுதி போட்டி நடந்தது.



இதில், 306 மாணவ - மாணவியர் முதல்நிலை சுற்றில் பங்கேற்றனர். அவர்களில், எட்டு அணிகளை சேர்ந்த, 16 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதில், சென்னை அருகே செம்பாக்கத்தில் உள்ள, சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவியர், முதல் பரிசு பெற்று, நாசாவுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றனர். ஒவ்வொரு சுற்றிலும், துவக்கம் முதலே, அதிக மதிப்பெண்களுடன் முன்னிலை பெற்ற, இந்த அணியை சேர்ந்த மாணவியர், 'பஸ்ஸர்' என்ற உடனடி பதில் சொல்லும் பிரிவில், கேள்விகளை முடிக்கும் முன்பே, அதிரடியாக பதில் அளித்து அசத்தினர். ஆறு கேள்விகளுக்கு தொடர்ந்து, சரியான பதில்களைக் கூறி, எட்ட முடியாத அளவுக்கு வெற்றியை உறுதி செய்து, பாராட்டுகளை குவித்தனர்.இதையடுத்து, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுக்கு, தலா ஒரு அணியினர் தேர்வு செய்யப்பட்டனர்.




அதேபோல், இறுதி சுற்றில் பங்கேற்ற மற்ற ஐந்து அணிகளுக்கும் பரிசு தரப்பட்டது. மேலும், இறுதி போட்டியின் முதல்நிலை போட்டியில் பங்கேற்ற, ஏழு முதல், 15ம் இடம் வரை பிடித்த அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கும், பொதுவான வினாடி - வினா நடத்தப்பட்டு, அதில் ரொக்க பரிசும் தரப்பட்டது. வெற்றியாளர்கள் பெயர்சென்னை மண்டலம்பள்ளி: சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செம்பாக்கம்.வெற்றியாளர்கள்: தனுஸ்ரீ, பெரில் சீயோனாகோவை மண்டலம்.பள்ளி: பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி, கோவை.வெற்றியாளர்கள்: எஸ்.பிரணவ் வர்ஷன், சக்தி எம். நித்தின் மதுரை மண்டலம். பள்ளி: ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.வெற்றியாளர்கள்: என்.கிரிஷா மாலினி, டி.கீதணி புதுச்சேரி மண்டலம்.பள்ளி: பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வெற்றியாளர்கள்: பி.விஜய கணபதி, பி.பாரதி.பரிசுகள் விபரம்முதல் இடம்: இரண்டு மாணவியர், அமெரிக்காவின், 'நாசா' பயணத்துக்கான ஏற்பாடு மற்றும் சுழல் கோப்பை2ம் இடம்:



50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, லேப்டாப், கோப்பை, லலிதா ஜுவல்லரியின் வெள்ளி நாணயம், உதயம் - வர்ணாவின், 1,000 ரூபாய் மதிப்பிலான பரிசு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய, 'கையருகே நிலா' புத்தகம்3ம் இடம்: 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன், கோப்பை, லலிதா ஜுவல்லரியின் வெள்ளி நாணயம், உதயம் - வர்ணாவின், 1,000 ரூபாய் மதிப்பிலான பரிசு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய, 'கையருகே நிலா' புத்தகம்மற்ற அணிகள்: 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம், கோப்பை, லலிதா ஜுவல்லரியின் வெள்ளி நாணயம், உதயம் - வர்ணாவின், 1,000 ரூபாய் மதிப்பிலான பரிசு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதிய, 'கையருகே நிலா' புத்தகம்.

Post Top Ad