கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட் ’ தகுதி தேர்வு எப்போது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 17, 2020

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட் ’ தகுதி தேர்வு எப்போது?

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘செட் ’ தகுதி தேர்வு எப்போது?

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழ கங்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள், உயர் கல்வித் துறையால் நடத்தப்படும் ‘செட்' (State Eligibility Test) எனப்படும் மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

இதற்காக உயர்கல்வித் துறை மாநிலப் பல்கலைக்கழகங்கள் மூல மாக இத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இத்தேர்வு நடத்தப் படாமல் உள்ளது.இதுகுறித்து கோவையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் மூலமாக கடந்த 2016, 2017, 2018 ஆகிய 3 ஆண்டுகள் ‘செட்' தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடைசியாக கடந்த 2018 மார்ச் மாதம் முதல் வாரத்தில் இத்தேர்வு நடத்தப்பட்டது.‘செட்' தகுதித் தேர்வு நடத்த நோடல் சென்டர்-ஆக தேர்வு செய் யப்படும் கல்வி நிறுவனம், 3 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிக்கும்.இதன்படி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் தொடர்ச்சியாக 3 ஆண்டு களுக்கு தேர்வு நடத்தி முடித்துவிட் டது. அதன் பின்னர் இத்தேர்வை நடத்துவதற்கான நோடல் சென்டர் எது? என்ற அறிவிப்பும், இத்தேர்வு நடைபெறுவது குறித்தும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நோடல் சென்டர்-ஆக தேர்வு செய் யப்பட்டு, ‘செட்' தகுதித்தேர்வு நடத் தப்படும் என தகவல்கள் வெளியா யின. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘செட்' தகுதித்தேர்வு அல்லது பிஹெச்.டி. கல்வித்தகுதி அவசியம். எம்.ஃபில். கல்வித்தகுதி ஆராய்ச்சிக்கு பயிற்சியாகவே கருதப்படுகிறது. வேலைவாய்ப் புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவது இல்லை.

அரசு மற்றும் தனியார் கல்லூரி கள் இந்நெறிமுறைகளையே வேலைவாய்ப்பில் பின்பற்றி வரு கின்றன. உதவிப் பேராசிரியர் பணிக் கான அறிவிப்பு மற்றும் விளம்பரங் களில் இந்த தகுதிகளை அடிக் கோடிட்டு காட்டுகின்றன.இந்நிலையில் பிஹெச்.டி. முடிக்க சில ஆண்டுகள் தேவைப் படும் என்பதால், ‘செட்' தகுதித் தேர்வு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்த வேண் டும். ‘செட்' தகுதித்தேர்வைப் போன்றே நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணி யாற்ற விரும்புபவர்களுக்கான ‘நெட்' (National Elegiblity Test) எனப்படும் தேசிய தகுதித்தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலமாக ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது.

2 தாள்களைக் கொண்ட இத்தேர் வில் முதல்தாள் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால், தாய்மொழி வழியில் கல்விபயின்றவர்கள், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். புரிந்து கொள்வதில் சற்றுகடினமான முதல் தாளால் பலமுறை எழுதியும் தேர்ச்சிபெற முடியாத நிலை ஏற் படுகிறது.

இந்நிலையில், மாநில மொழி யில் நடத்தப்படும் 'செட்' தகுதித் தேர்வு நடத்தினால் மட்டுமே, தமிழ் வழிக் கல்வியில் கல்வி கற்றவர் களால் தேர்ச்சி பெற முடியும். இதை கருத்தில் கொண்டு இத்தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசின் உயர் கல்வித் துறை விரைவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரி யர் கழக கோவை மண்டல செய லர் ப.ரமேஷ் கூறும்போது, “தமி ழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரி யர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தகுதியான பலர் இவ் வேலைவாய்ப்புக்காக தயாராகி வருகின்றனர்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யுஜிசி) வழி காட்டுதல் படி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ‘செட்', ‘நெட்' தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பிஹெச்.டி. பட்டம் பெற்ற வர்களே உதவிப்பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பற்றாக்குறைநிலவு கிறது.

முதுநிலை பட்டதாரிகள் உதவிப் பேராசிரியர்பணிக்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும் வகையில், 'செட்' தகுதித்தேர்வு நடத்துவது, அவர்களுக்கு பயனுள் ளதாகவும், எதிர்காலத்தை உரு வாக்கித் தருவதாகவும் இருக்கும்” என்றார்.

Post Top Ad