Fit India School - 3,5 Star Rating பெற அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க இயக்குநர் உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 6, 2020

Fit India School - 3,5 Star Rating பெற அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க இயக்குநர் உத்தரவு!

Fit India School - 3,5 Star Rating பெற அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க இயக்குநர் உத்தரவு!

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www . fitindia . gov . in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது . பார்வை 2 இல் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag . 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது .




இப்பொருள் சார்ந்து அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் தத்தம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இப்பணியை அவர்தம் பள்ளிகளில் உடனே முடிக்குமாறும் அப்பள்ளியின் தொடர் செயல்பாடுகளைத் தொடர்ந்து இவ்விணையதளத்தில் பதிவேற்றி வருமாறும் அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .




பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து kInvelanic . in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு 10 . 02 . 2020 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைத்திடுமாறு அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Post Top Ad