GATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு!

GATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு!
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்காக கேட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வு விடைக் குறிப்புகள் (GATE 2020 Answer Key) நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயில கேட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020-ஆம் கல்வியாண்டிற்கான கேட் நுழைவுத்தேர்வை, டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் கடந்த பிப்ரவரி 1, 2, 9 தேதிகளில் நடத்தியது.




இதனைத் தொடர்ந்து, கேட் 2020 தேர்விற்கான விடைக்குறிப்புகள் பிப்ப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேட் தேர்வு வினாத்தாள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை www.gate.iitd.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேரடியாக GATE 2020 Question Paper பார்ப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
மேலும், கேட் 2020 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் பிப்ரவரி 19ம் தேதியன்று (நாளை) வெளியிடப்படும். விடைக்குறிப்புகள் வெளியானதும், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள், மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கலாம். இதற்கான விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய் ஆகும்.




விடைக்குறிப்பில் விடைகளில் உள்ள ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்குப் பிப்ரவரி 21 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ஆட்சேபனைகளுக்குப் பிறகு, GATE 2020 தேர்விற்கான இறுதி முடிவுகள் 2020 மார்ச் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive