மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அரசாணை வெளியிடவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதுஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்திதொடர்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.பெற்றோரும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலை சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மத்தியசுகாதார மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை கருத்தில்கொண்டு தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசாணை வெளியிடவேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகள்

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகள்
கரோனா தொற்று நிலைமை சீரடைந்த பின்னரே ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும், தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, என்.டி.ஏ. சாா்பில் ஏப்ரல் 5,7,9 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த ஐஐடி போன்ற மத்தியஅரசு உயா் கல்வி நிறுவனங்களில் சோக்கை பெறுவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு மே கடைசி வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் என்.டி.ஏ. அறிவித்திருந்தது.இந்த நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை என்.டி.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், வரும் வாரங்களில் கரோனா நிலைமை சீரடைந்த பிறகே, ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும். எனவே, மாணவா்களும் பெற்றோரும் தொடா்ந்து வலைதளங்களை பாா்த்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3-ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது . இதற்கு இடையில் சென்னை பல்லாவரம் சரகத்தில் உள்ள பணியாளர்கள் கூட்டுறவு இணை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்,தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அரசு தடை உத்தரவை திரும்ப பெறும்வரை, பணிக்கு வர முடியாத நிலையில் உள்ளோம்.எனவே அதுவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .அதில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2500, உதவியாளர்களுக்கு ரூ.2000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நெட்' உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

'நெட்' உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்ட தகவல்:
ஹோட்டல் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கான தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் (என்.சி.ஹெச்.எம்.) நடத்தும் ஜே.இ.இ. 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமையுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.டெக். வேளாண் பொறியியல் படிப்புகளில் சோக்கை பெறுவதற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்தும் ஐ.சி.ஏ.ஆா். - 2020 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் ஏப்ரல் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.'நெட்' தேர்வுக்கு: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குமான 'நெட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 16 வரை முன்னா் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், அடிப்படை அறிவியல் துறை சாா்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் சி.எஸ்.ஐ.ஆா். - நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஆயுஷ் முதுநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு (ஏஐஏபிஜிஆடி 2020) விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தேர்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும்: இந்த அனைத்து தேர்வுகளுக்குமான புதிய தேர்வு தேதிகளும், தேர்வறை அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான தேதியும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு என்.டி.ஏ. வலைதளத்தில் வெளியிடப்படும்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு, மாணவா்களும், பெற்றோரும் என்.டி.ஏ. வலைதளத்தை தொடா்ந்து பாா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தேர்வு தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அறிந்துகொள்ளலாம் என என்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் சேமித்த பணத்தை வழங்கிய ஏழை மாணவ மாணவியர்

கொரோனா பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் சேமித்த பணத்தை வழங்கிய ஏழை மாணவ மாணவியர்


தேசிய பேரிடரான கொரானா பாதிப்பு குறித்து தலைமை ஆசிரியர் மூலம் கேள்விப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவியர் தங்களது சேமிப்புப் பணம் முழுவதையும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இது ஒரு குக்கிராமம். இக் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் இப் பள்ளியில் தொடக்கக் கல்வியை கற்று வருகிறார்கள்.
இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியை கா.ரோஸ்லினா ஆகியோர், மாணவர்களுக்கு கல்வியியுடன் நாட்டுப்பற்று, மனித நேயம், இருப்பதிலிருந்து மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பு முதலியவற்றை வளர்த்து வருகிறார்கள். அதேபோல, நாட்டில் ஏற்படும் துயர சம்பவங்களில் தங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தையும் சிறு வயது முதலே வளர்த்து வருகிறார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்தும், மத்திய மாநில அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் குறித்தும் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் விளக்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாணவ மாணவியருக்கு விளக்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாணவ மாணவர்கள் தங்களது சேமிப்பு பணம் முழுவதையும் அளிக்க முன் வந்தனர்.
இப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தலைமை ஆசிரியர் பிப்ரவரி 2020 முதல் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
அனைத்துப் பாடங்களிலும் நடத்தப்படும் கற்றல் விளைவுகள் மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீடு, தொடர் மதிப்பீடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதெழுதுதல், விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருதல், விளையாட்டில் முதன்மை, ஓவியம், பொது அறிவு வினாடி-வினா, படைப்பாற்றல், நல்லொழுக்கம், ஆங்கிலம் பேசும் திறன்  (Spoken English), சிறப்புத் திறமைகள், நன்னெறி புகட்டும் செய்யுள் பகுதிகளைப் பொருளுடன் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு ஸ்டார் வழங்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்டாருக்கும் ஒவ்வொரு ரூபாய் உடனுக்குடன் தலைமை ஆசிரியர் தனது சொந்தப் பணத்தில் வழங்குகிறார். இது ஒவ்வொரு மாணவர் பெயர் எழுதப்பட்ட உண்டியலில் சேமித்து வைக்கப்படுகிறது.
பள்ளியில் நன்றாகப் படித்து பாராட்டு பெறும் மாணவன், தான் வசிக்கும் பகுதியில் கெட்ட வார்த்தை பேசினாலோ, வீட்டில் பெற்றோரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டாலோ, அந்த விஷயம் சக மாணவர்கள் மூலம் அறியப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவனின் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் எடுக்கப்படும். இதன்மூலம், நல்லொழுக்கத்தையும் மாணவர்கள் பேணும் சூழல் இப் பள்ளியில் உருவாகிறது.
க.காவியா (1ம் வகுப்பு), பொ.சுரேஷ்குமார், வி.யோகமுனீஸ்வரன் (3ம் வகுப்பு), கோ.காளி வைஷ்ணவி (4ம் வகுப்பு), பொ.அனிதா (5ம் வகுப்பு) ஆகிய 5 மாணவ மாணவியரும் பள்ளியில் தாங்கள் படித்து தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டு சேமித்து வைத்த உண்டியல் பணம் மற்றும் தாங்கள் வீடுகளில் சேமித்து வைத்த மொத்த பணத்தையும் தலைமை ஆசிரியரிடம் கொண்டு வந்து வழங்கினர். மொத்த தொகை ரூ.2367 (ரூபாய் இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்து ஏழு மட்டும்) சேர்ந்தது.
இதனை தலைமை ஆசிரியர், முதல்வரின் நிவாரண நிதிக்கு உடனே அனுப்பி வைத்தார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் சிறுக சிறுக தங்களது தேவைகளுக்காக (வரும் பங்குனி பொங்களுக்கு துணி எடுக்க) சேமித்து வைத்த பணம் முழுவதையும் அப்படியே கொடுத்துள்ளார்கள். தொகை குறைவாக இருந்தாலும் நாட்டில் ஏற்படும் இதுபோன்ற பேரிடர்களில் அவர்கள் பங்களிப்பும் இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். மாணவர்கள் கூறுகையில் பங்குனி பொங்கலுக்கு ஆண்டிற்கு ஒரு முறை துணி எடுப்போம். தற்போது பணம் முழுவதையும் கொடுத்துவிட்டோம். பொங்கல் அடுத்த மாதம் (மே) வருகிறது.
இந்த மாணவ மாணவியர் கேரள வெள்ள பாதிப்பிற்கு அம் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு, கஜா புயல் நிவாரணம் என ஒவ்வொரு முறை நாட்டில் பேரிடர் ஏற்படும் போதும் அதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆன்லைன் பயிற்சி நீங்கள் வீட்டில் இருந்தே பயிற்சியில் கலந்து கொள்ளலாம். உங்கள் மொபைல் போன் மூலம் கீழ்கண்ட மொபைல் ஆப் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலமே பயிற்சி வழங்க உள்ளோம். Zoom meeting App link https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings ஏப்ரல் 01.04.2020 முதல் தினந்தோறும் மாலை 4.30 முதல்

மாத இறுதியில் சிபிஎஸ்இ தேர்வுகள்


சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல, பணிகள் தொடங்கிய பிறகு தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இயை பொறுத்தவரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகுதான் ஆலோசிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் கூடுதல் பதிவாளர் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்களுக்கு திரு.கோவிந்தராஜ்.இ.அ.ப. அவர்கள் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் அறிக்கை!

நா.க எண்: 3069 நாள்.31.03.2020.




அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!

அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!
 
 
கொரோனா பிரச்சனை காரணமாகசி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளிகல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறுதேர்வு வாரிய பள்ளி தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டு இருப்பதால்உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்புஇல்லை.

எனவேஊரடங்கு முடிந்ததும் தேர்வுநடத்துவது பற்றி ஆய்வு செய்யஉள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:-தள்ளி வைக்கப்பட்டஅனைத்து தேர்வுகளையும் ஏப்ரல்கடைசி வாரத்தில் தொடங்கி மேமத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டுஇருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்குநிறைவு பெற்றதும் இதுபற்றிஅதிகாரிகள் கூடி ஆலோசனைநடத்துவோம்.

அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதிஅறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்ததேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர்திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகுதேர்வு நடத்தப்படும்விடைத்தாள்களையும் திருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளை சம்பளம்! Atm போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!!

நாளை சம்பளம்! Atm போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!!

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

 நாளை (02.04.2020) ஆசிரியப் பெருமக்கள் மார்ச் மாத ஊதியம் தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுசமயம்... ஆசிரியப் பெருமக்கள் தங்களின் மாத ஊதியத்தினை ATM மூலம் எடுக்கும் போது கவனம் தேவை ... ஏனெனில் சீனாவில் கொரானா வைரஸ் ATM மூலமாக தான் வேகமாக பரவியதாக ஒரு தகவல்..

எனவே ஆசிரியப் பெருமக்கள் ATM மெஷினில் பணம் எடுக்கும் முன் கையுறை அணிந்தோ அல்லது கையில் பாலித்தின் உறை அணிந்து கொண்டோ பணத்தினை எடுக்க வேண்டுகிறோம்...

மேலும் ATM சென்று வந்தவுடன் கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.... ATM மிஷினிலிருந்து எடுத்த தொகையினை மூன்று நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவது நல்லது என்பதால் மேற்கண்ட நிகழ்வுகளில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு கொரானா வைரஸ்  நம்மை தாக்காமல் இருக்கத்தக்க முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாளை முதல் கொரோனா நிவாரணம் ₹1,000/ வழங்கப்படும்!

நாளை முதல் கொரோனா நிவாரணம் ₹1,000/ வழங்கப்படும்!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  மத்திய அரசு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்,  ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பரவலாக செய்தி வந்த நிலையில் நேற்று மத்திய அரசு தற்போதைக்கு நீட்டிக்கும் நிலை இல்லை என தெரிவித்தது.

இது குறித்து முதல்வரிடம் கேட்டபோது,  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

11th / +1 / Plus One - Public Exam March 2019 - Original Question Papers & Answer Keys Download

11th / +1 / Plus One - Public Exam March 2019 - Original Question Papers & Answer Keys Download

நடமாடும் Atm - Sbi அறிவிப்பு!

நடமாடும் Atm - Sbi அறிவிப்பு!

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?
கொரோனா வைரஸ் பரவுவவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அவை, *அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள் என, ரத்த சம்பந்தமானவர்களின் திருமணத்திற்கு மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். மேற்கண்ட நபர்களின் இறப்பு தொடர்பாக, துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, அனுமதி வழங்கப்படும். பெரியப்பா, சித்தப்பா, மாமா போன்ற உறவினர்கள் இறப்புக்கு, அனுமதி சீட்டு கிடையாது*குடும்ப உறுப்பினர்களான, அண்ணன், அக்கா, தங்கை, மனைவி; நோய் வாய்ப்பட்டு தனியாக இருக்கும், தாத்தா, பாட்டி ஆகியோரின் மருத்துவம் தொடர்பாக செல்லவும், மனைவியின் பிரசவம்தொடர்பாக செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படும். *வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், துணை ஏதும் இல்லாமல் தனியாக வசிக்கும், ரத்த சம்பந்தமான முதியோர்களையும், நோய் வாய்ப்பட்ட பெற்றோரை அழைத்து வரவும், அனுமதி வழங்கப்படும். *பெற்றோரை விட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்,உறவினர்களிடம் இருக்கும், இரண்டரை வயது மகன், மகளை அழைத்து வர, அனுமதி வழங்கப்படும்*கோரிக்கை கடிதங்களை, சந்திக்க விரும்பும் நபர்களின், தேவையான அடையாள ஆவணங்களுடன், சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் *மேலும், 75300 01100 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தும், அனுமதி சீட்டு கோரலாம். gcpcorona2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம் *கோரிக்கை கடிதங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, உண்மையாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும்.

Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?

Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?
PhonePe, Google Pay, Amazon Pay, PayTM உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழ்காணும் விளக்கத்தை நன்கு படித்து பின்னர் அனுப்பவும்.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகமே பேரச்சத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில்கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்றாட கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தியவர்கள், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது சிறு வணிகர்களும், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இவர்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கு மத்தியில் அவர்களுக்கு உணவு வழங்குவது அரசின் கடமையாகிறது. ஒரு பக்கம் தன்னார்வலர்களும் உதவிகரம் நீட்டி 
வருகின்றனர். அதேபோல், மருத்துவ தேவைகளையும் பூர்த்தி செய்ய பெரிய அளவில் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய மாநில அரசுகள் நிதி உதவியையும் நாடுகின்றன.நன்கொடை அளிக்க முன்வரும் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களின் நிதியை கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடையளிக்க...
1. கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து பணம் செலுத்தலாம். 
https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html
2. வங்கி மூலமாக:
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
S.B. A/c No. : 11720 10000 00070
IFS Code : IOBA0001172
CMPRF PAN : AAAGC0038F

3. UPI மூலம் அனுப்ப: tncmprf@iob
இந்த UPI முகவரியைக் கொண்டு BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik உள்ளிட்ட சேவைகள் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்.
மத்திய அரசின் ' அவசர காலங்களில் குடிமக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நிதி' க்கு நன்கொடை அளிக்க...

1. வங்கி கணக்கு மூலம் அனுப்ப..
Name of the Account : PM CARES
Account Number : 2121PM20202
IFSC Code : SBIN0000691
SWIFT Code : SBININBB104
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Main Branch


2. UPI ID : pmcares@sbi

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு - உயர்கல்வித்துறை உத்தரவு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு - உயர்கல்வித்துறை உத்தரவு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது.

ஊரடங்கால் ஏப்ரல் 14-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Flash News: இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு!

Flash News: இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளதால் இன்று பணிஓய்வு பெறும் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர்

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது - தனியார் பள்ளி இயக்குநர்

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் செய்யக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினாலோ, கட்டணம் வசூலித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப் பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும்,21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு வகை பாட திட்டங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி. எஸ்.இ., பாட திட்டத்திலும், பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்புக்கான சில பாடங்களுக்கு, தேர்வகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தமிழக பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுதேர்வுகள், இந்த மாதம், 27ல் நடத்தப்பட இருந்தநிலையில், அந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. மீண்டும் ஏப்., 15 முதல்பொது தேர்வை நடத்தலாம் என, ஏற்கனவே திட்டமிடப்பட்டது.ஆனால், கொரோனா வின் கொடூர தாக்கத்தால், ஏப்ரலில் நிலைமை முழுதுமாக கட்டுப்பாட்டில் வந்து விடுமா என்பது, சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது. 

மேலும், ஏப்ரலில் ஊரடங்கு முடிந்தாலும், உடனே தேர்வை நடத்துவதற்காசாத்தியக் கூறு கள் இல்லை . எனவே, மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தான் தேர்வை துவங்கலாம். ஆனால், நாடு முழுதும் அனைத்து துறைகளிலும், மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு
அதிகபட்ச நிதி தேவைப்படும்.

எனவே, இந்த ஆண்டு மட்டும் பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்யலாம் என்றும், அனைவருக்கும் தேர்ச்சிஅறிவிக்கலாம் என்றும், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந் நிலையில் , காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யலாம் என்றும், சிலர்கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து,பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப்பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இதுபோன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டதா; அப்போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை
செயலகம் அறிவுறுத்தி உள்ளது.

3 மாதங்களுக்கு Emi யார் யாருக்கு இல்லை - வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்!

3 மாதங்களுக்கு Emi யார் யாருக்கு இல்லை - வங்கி அலுவலரின் தெளிவான விளக்கங்கள்!


வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI  கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி  கட்ட சொல்லிஉள்ளது.

அது எப்படி ? விரிவாக காண்போம் :

நாம்  சுமாராக 120 மாதங்கள் கடன் கட்டுகிறோம் என்றால் அதனை மூன்று மாதங்கள் தள்ளி கொடுத்துள்ளது .123 மாதங்கள் கட்டிக்கொள்ளலாம்.ஏப்ரல், மே, ஜூன் - 3 மாதங்களுக்கும் உள்ள தொகையை கடன் தொகை முடியும் மாத கடைசிக்கு பிறகு உள்ள மூன்று மாதங்களில் கட்டிக்கொள்ளலாம். உதாரணமாக 120 மாதங்கள் கட்ட வேண்டுமென்றால் 120 மாதங்கள் கட்டி முடித்துவிட்டு 121, 12,2 123 ஆவது மாதங்களாக ஏப்ரல், மே ,ஜூன் 2020ம் ஆண்டுக்கான தொகைகளை கட்டிக்கொள்ளலாம். 2020 ஜூலையில் ஜூலை மாதத்திற்கு உரிய தொகையை கட்டினாலே போதும்.சேர்த்து கட்ட  வேண்டிய அவசியமில்லை. எனவே இது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படவில்லை. தள்ளி மட்டுமே வைத்துள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மாத சம்பளக்காரர்களின் நிலை என்ன ?

மாத சம்பள காரர்கள் இசிஎஸ் மூலமாக பணம் சென்று கொண்டிருந்தால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் கண்டிப்பாக ஏப்ரல்  -2020 மாதத்திற்கு உரிய தொகையும் எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் ,மே ,ஜூன் 2020 மாத கடன் தொகைகள் அந்தந்த மாதங்களில் எடுத்துக்கொள்ளப்படும். வங்கி கணக்கில் பணம்  இல்லாவிடில் மட்டுமே ஏப்ரல் ,மே, ஜூன் 2020 மாதத்திற்கான கடன் தள்ளி கொடுக்கப்படும்.  ECS மூலம் கடன் வங்கியில் பணம் எடுக்கும்போது பணம்  வங்கியில் இருப்பு இருந்தால் பணம் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 மாதங்களும் பணம் இல்லை என்றால் அதற்குரிய அதிக அபராதங்களும் எதுவும் போட மாட்டார்கள். இதனை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டியது.

கிரெடிட் கார்டு கடன் நிலைமை என்ன ?

கிரெடிட் கார்டுக்கான EMI கட்டும் பணம் தள்ளி கட்டுவதற்கான தகவல் மத்திய அரசின் உத்தரவில் இல்லை.எனவே கிரெடிட் கார்டு மூலம் பெற்றுள்ள கடன்களுக்கும், இந்த உத்தரவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனவே கிரெடிட் கார்டுகளுக்கான கடன் தள்ளிப்போகமாட்டாது.

தனியார் வங்கிகள்,தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் , ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் சொசைட்டி கடன், கூட்டுறவு சொசைட்டி கடன்களுக்கும் இது பொருந்துமா ?

நிச்சயமாக பொருந்தும். அரசு அறிவித்துள்ள இந்த மூன்று மாதங்களில் நிலுவை தொகையை செலுத்துங்கள் என்று வங்கி அலுவலர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள்.

வங்கியில் பணம் இல்லை என்றால் எப்படி?

பணம் இருந்தால் எடுத்துக்கொள்ளும்.இல்லாவிடில் பணம் எடுத்துக்கொள்ளாது.கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை.மத்தியஅரசு அறிவித்துள்ளது வாகன கடன்,வீடு கடன்,பர்சனல் லோன் மூன்றுக்கு மட்டுமே மூன்று மாதம் தவணையை தள்ளி கொடுத்துள்ளது.வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களுக்கான தள்ளி வைப்புதான் அது.உதாரணமாக ,நான் இந்த மாதம் வாங்கிய சம்பளம் முழுவதும் எடுத்து செலவு செய்துவிட்டேன்.வங்கியில் பணமே இல்லை என்ற நிலையில் உங்களுக்கான அபராதம் விதிப்பில் இருந்து தவிர்ப்பு கிடைக்கும்.கடன் பணம் கட்ட வேண்டிய காலம் 3 மாதம் தள்ளி போகும்.இந்த குறிப்பிட்ட மூன்று மாதங்கள் பணம் கட்ட வில்லை என்றால் கடன் பெற்றவருக்கு வங்கி போன் செய்தோ,நேரிலோ தொந்தரவு கொடுக்க கூடாது.மேலும் கடன் கடன் கட்டாதவர் என்று சிபிலில் பெயரை சேர்க்க கூடாது. இந்த தகவல்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் அறிக்கை!

மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் அறிக்கை!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K . பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள் 31 . 3 . 2020

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் ( 30 . 3 . 2020 ) கலந்தாய்வு செய்த பின்னர் , இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி , கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன் :

1 . கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

2 . வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

3 . தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

4 . அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

5 . தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ( TIIC ) கடன் பெற்றுள்ள சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .

6 . ' கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ' என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 , 000 சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும் .

7 . சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது .

8 . சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .

9 . மோட்டார் வாகன ( Motor Vehicles Act ) , சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் ( Licence & FC ) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

10 . எடைகளும் , அளவைகளும் சட்டம் ( Weights & Measures Act ) , தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ( TN Shops & Establishments Act ) , உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ( Dangerous & Offence Act ) , ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

11 . உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி , குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .

12 . தற்போது உள்ள சூழ்நிலையில் , வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் . எனவே , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

தமிழ்நாடு அரசு கொரானா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது . அதே சமயத்தில் , இந்நோய்த் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும் , அது மூன்றாம் கட்டத்திற்குப் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து , தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் . எனவே , அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் . மேலும் , எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம் . வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது . எனவே உங்களின் நன்மைக்காகவும் , உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும் , நம் நாட்டின் நன்மைக்காகவும் , பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் .

“ விழித்திருப்போம் ; விலகியிருப்போம் ; வீட்டிலேயே இருப்போம் ; கொரோனாவை வெல்வோம் . ”

K . பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9

10th / SSLC - Public Exam March 2020 - Official Model Question Papers, Answer keys Download - English Medium & Tamil Medium

10th / SSLC - Public Exam March 2020 - Official Model Question Papers, Answer keys Download - English Medium & Tamil Medium

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு கோப்புப்படம் புதுடெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'மெய் நிகர்' கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயராகும் மாணவர்கள் பயனடையும் வகையில் 'மெய்நிகர்' கட்டுப்பாட்டு அறையை, பள்ளி கல்வி இயக்ககம் உருவாக்கி உள்ளது.மாணவர்கள் தாங்கள் பொதுத்தேர்வுக்கு தயராகும் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், இந்த மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் பாடவாரி ஆசிரியர்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களை நேரிடையாகவோ, வாட்ஸ் ஆப் மூலமோ தொடர்பு கொண்டு, தங்கள் பாட சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.தமிழ் - 95667 28352; ஆங்கிலம் - 99441 98425; கணிதம் - 72009 18139; இயற்பியல் மற்றும் வேதியியல் - 99942 03828; , உயிரியல் - 80154 23235; சமூகவியல் - 99941 96886 ஆகிய எண்களில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் பத்தாம் வகுப்பு பாடங்களை வீடியோ நிகழ்ச்சியாக, உரிய வல்லுனர்களை கொண்டு, புதுச்சேரியின் உள்ளூர் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிகளின் பதிவுகளை கீழ்கண்ட 'க்யூஆர்' மூலமாகவோ அல்லது இணைய நுழைவு, யூ டியூப் வாயிலாக மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்.மேலும் https://www.youtupe.com/channel/uc2102f5yOs2ebcmd68kn13g இணையதளத்தை அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் மூலிகை

சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் மூலிகை
சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.

புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்

புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்

புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும்.பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும்.புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்!

கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது.

காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி இல் வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் மணம் தெரியாமல் போனாலும், உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமல் போனாலும் அது கொரோனா வைரசின் ஆரம்ப கால அறிகுறிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி முகர்ந்தால் மணம் தெரியாமலும், நாக்கில் சுவையை ருசிக்க முடியாமல் போனாலும் அவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என முடிவுக்கு வந்து அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்; அத்துடன் தங்களை அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பலரும், தங்களுக்கு ஆரம்பத்தில் வாசனையும், சுவையும் தெரியாமல் போனதாக கூறி உள்ளனர்.

ஒரு சிலர் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கி சில நாட்களில் தான் தங்களுக்கு வாசனை தெரியாமலும், நாக்கில் சுவை உணர முடியாமலும் போனதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதியை பின்பற்றுவோருக்கு அரசு சான்றிதழ்

ஊரடங்கு விதியை பின்பற்றுவோருக்கு அரசு சான்றிதழ்



ஊரடங்கு விதியை பின்பற்றி வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்குவிப்பு சான்றிதழ் வழங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க, ஏப்.14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.


இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி, பலரும் வெளியே சுற்றி வருகின்றனர்.அதே சமயம், 21 நாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீட்டிலேயே இருப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கி வருகிறது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் 'ஸ்டே அட் ேஹாம், ஸ்டே லைவ் பிளட்ஜ்' என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது.


ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து, வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து தன்னையும், சுற்றுப்புற மக்களையும் பாதுகாக்க விரும்பும் எவரும் https:// pledge.mygov.in ல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அதில், பெயர், பாலினம், இமெயில், வீட்டு முகவரி, மாவட்டம், மாநிலம் மற்றும் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.


தொடர்ந்து, 21 நாட்கள் ஊரடங்கு விதியை பின்பற்றுவேன். வீட்டிலேயே தங்கியிருப்பேன் என உறுதி மொழி ஒப்புதல் அளித்ததும் சான்றிதழ் திரை முன்பாக தோன்றும். அதனை டவுன்லோடு செய்து பிரின்ட் எடுக்கலாம். பிறகு, நாம் வீட்டிலேயே தங்கியிருப்பது அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்யப்படும். இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


ஊரடங்கு நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக வெளியில் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த விட்டமின்கள், தாதுப்பொருட்கள், இரும்பு மற்றும் நார்சத்து அடங்கிய கனி, காய்கறிகளை வாங்கி உட்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு கூறி கடைகளை திறந்து வைத்திருந்தாலும், அதை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது போலீசார் லத்தியால் அடித்து வாங்க விடாமல் தடுப்பது  மனிதாபிமானமற்ற செயல்.


 இதேபோல தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து பணிக்கு வந்தவர்கள் என பலரும் உணவு, இருப்பிடம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  அத்தியாவசிய தேவைகளின்றி சட்டத்தை மீறி நடமாடுபவர்களை போலீசார் கைது செய்யலாமேயன்றி அவர்களை தண்டிக்கக்கூடாது. 

எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் காரணமின்றி சாலைகளில் நடமாடும் பொதுமக்களை அடித்து துன்புறுத்தக்கூடாது என்று தமிழக உள்துறை மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 


இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.  நீதிபதிகளும், மனுதாரர் தரப்பு வக்கல் சிவஞானசம்பந்தமும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியனும், அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரும் அவரவர் வீடுகளில் இருந்து ஜூம் வாட்ஸ்அப் என்ற ஆப் மூலம்  விசாரணையில் பங்கேற்றனர்.


 இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த விசாரணை நடந்தது. நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் பதிலளிக்கும்போது, எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களை போலீசார் தடுப்பதில்லை.  

இதுவரை ஊரடங்கை மீறியதாக 17,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. 13,660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ₹5 லட்சத்து 9030 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மனுதாரர் பொதுவான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்றார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை போலீசார்  கையாளவேண்டும். மக்களின் அத்தியாவசிய தேவையை போலீசார் கருத்தில் கொள்ள வேண்டும். 

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பிரிவு 21 கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். நியாயமான காரணங்களுக்காக வெளியே செல்ல நேரும்போது அந்த மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை அரசு செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்!

கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்!

Activate your location and press click here
coronatracker.in
shows how close are you from the nearest covid-19 confirmed case.

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம்.


தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? வாங்க செக் செய்யலாம்!
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 144 தடையுத்தரவும் போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பணி தவிர்த்து மற்ற பணி நிமித்தமாக யாரும் வெளியே வர முடியவில்லை.வாழ்வாதாரம்
1000 நிதியுதவி

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போல் ஏப்ரல் மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ 1000 நிதியுதவி யாருக்கெல்லாம் வரும் என்பதை நாம் இணையத்தில் சோதனை செய்துக் கொள்ளலாம்.




செயலி
செல்போன் எண்
உங்கள் மொபைலில் TNEPDS என்ற செயலியை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். இந்த செயலியினுள் சென்றால் செல்போன் எண்ணை கேட்கும். உங்கள் ரேஷன் கார்டில் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அதை கொடுக்கவும்.




கேப்ட்சா
டைப் செய்யுங்கள்
அதன் பின்னர் கீழே இருக்கும் கேப்ட்சாவை கொடுங்கள். அப்போது பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள். அப்போது உங்களுக்கு ஒரு ஒன்டைம் பாஸ்வேர்டு (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) வரும். அதை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டைப் செய்துவிட்டு உள்நுழை என்ற பட்டனை அழுத்துங்கள்.




உரிமம்
நிவாரணம்

இதில் ஏராளமான தகவல்கள் வரும் அதில் "உரிமம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் 1000 ரூ நிதித் தொகை என கொடுத்திருப்பார்கள். அதில் உரிம அளவு எனும் இடத்தில் ஒன்று என்ற எண் (1.000) இருந்தால் உங்களுக்கு நிவாரணம் உண்டு. மீத அளவு என்ற இடத்திலும் 1 என்ற எண் இருந்தால் நீங்கள் அந்த தொகையை வாங்கவில்லை என அர்த்தம். ஜீரோ என இருந்தால் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் என்பது அர்த்தம்

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

ஆக்சிஜன் இன்றி உடல் உறுப்புகள்  சில வினாடிகள் இயங்குவது கடினம்.. அந்தவேளையில் உயிரைக் காக்கும் செயற்கை கருவி தான் இந்த வெண்டிலேட்டர்..நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்தசுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள்.இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.

வென்டிலேட்டர்களில் பல்வேறு வகைகள் உள்ளன.கோவிட்-19 தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் செயல்பாடு நாளடைவில் பலவீனமடைகிறது.

இந்த பிரச்சனை குறித்து அறிந்தவுடன், நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் இரத்த குழாய்களை விரிவடைய செய்வதால், அதிகளவிலான நோயெதிர்ப்பு செல்கள் நுழைகின்றன.இந்த செயல்பாட்டின் காரணமாக நுரையீரலுக்குள் திரவங்கள் அதிகளவு நுழைவதால், அதன் காரணமாக நோயாளி சுவாசிப்பதற்கு சிரமப்பட தொடங்குகிறார்.

இதனால், அந்த நபரின் உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைய ஆரம்பிக்கிறது.இந்த சிக்கலான பிரச்சனையை கையாள்வதற்கு பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள், உயர் அளவு ஆக்சிஜன் மிக்க காற்றை நுரையீரலுக்குள் செலுத்த உதவுகிறது.

வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டியும் இருப்பதால், அவை செயற்கையாக செலுத்தப்படும் காற்றிலுள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து சரிவர பராமரிக்கிறது.

நோயாளியின் மொத்த சுவாச செயல்பாட்டையும் வென்டிலேட்டர் மேற்கொள்வதால் இடைப்பட்ட நேரத்தில் நோயாளியின் சுவாச தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.நோய்த்தொற்றுக்குரிய லேசான அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு முகக்கவசங்கள், நாசிவழிக் கவசங்கள் அல்லது வாய்வழிக் கவசங்கள் வாயிலாக காற்றோ அல்லது பலதரப்பட்ட வாயுக்களின் கலவையோ நுரையீரலுக்குள் செலுத்தப்படும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன."வென்டிலேட்டர் பராமரிப்பு மிகவும் சிக்கலானது. அதை சரிவர நிர்வகிக்காவிட்டால் அது நோயாளின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். தொழில்நுட்ப அம்சங்கள் சவாலானவை.

ஒரு குறிப்பிட்ட வகை வென்டிலேட்டரை பயன்படுத்தியவர்களால் அனைத்து ரக வென்டிலேட்டரையும் இயக்க முடியும் என்று கூற முடியாது" என்று மருத்துவர் லஹா கூறுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போது ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே மருத்துவமனைகளில் உள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் இதன் தேவை பல லட்சங்களை தாண்ட கூடும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகளவிலான கருவிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, மகேந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

அரசு ஊழியர்களுக்கு 75 சதவீதம் வரை சம்பளம் குறைப்பு - தெலுங்கானா முதல்வர்

அரசு ஊழியர்களுக்கு 75 சதவீதம் வரை சம்பளம் குறைப்பு - தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும்.

மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள Atm மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள Atm மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?
நீங்கள் ஒரு ஜியோ பயனரா? உங்கள் ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா?
வாங்க.. ஈஸியா எப்படி ஜியோ நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள்.



உங்கள் ATM கார்டை மெஷின் செருகுங்கள். இப்போது "ரீசார்ஜ் (Recharge)" என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய எண்ணை உள்ளிடுங்கள்.
இப்போது மெஷின் உங்கள் 4 இலக்க PIN நம்பரை உள்ளிட சொல்லி கேட்கும். அப்போது PIN நம்பரை உள்ளிடுங்கள்.
அடுத்து, நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய பண மதிப்பை உள்ளிடுங்கள். MyJio ஆப் மூலம் சரியான ரீசார்ஜ் எண்ணை தான் உள்ளிடுகிறோமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.



சரிபார்த்துவிட்டு உறுதி செய்ய ENTER பொத்தானை அழுத்துங்கள். இப்போது ATM மெஷின் திரையில், ரீசார்ஜ் மெசேஜ் தோன்றும் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும் என்று காண்பிக்கும்.
ரீசார்ஜ் வெற்றிகரமாக ஆகியிருந்தால் நீங்கள் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு மெசேஜ் வரும்.அவ்வளவுதான், ATM மெஷின் மூலம் உங்கள் ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தது.

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை

‘கொரோனா தாக்கப்பட்டதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், கடுமையான தலைவலி போன்றவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்,’ என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. இப்போது, அமெரிக்க டாக்டர்கள் சங்கம், மேலும் சில ஆரம்பக்கட்ட அறிகுறிகளை கண்டுபிடித்து கூறியுள்ளது. 


இது குறித்து அமெரிக்க அகாடமியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துணை தலைவர் ஜேம்ஸ் டென்னி, ‘ஹீலியோ பிரைமரி கேர்’ என்ற மருத்துவ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘மணம், சுவை ஆகியவற்றை உணர முடியாமல் போவதற்கு ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னைகள் முக்கிய காரணம். இவை இல்லாமல் ஒருவரால் மணம், சுவை ஆகியவற்றை உணர முடியவில்லை என்றால், அது கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகள் சிலருக்கு இந்த அறிகுறி ஆரம்பத்தில் உள்ளது. ஆனால், சிலருக்கு நோய் பாதிப்புக்கு பின்பு இந்த அறிகுறி ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை உலகம் முழுவதும் திரட்டி ஆராய வேண்டும்,’’ என்றார்.

அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்

அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்



கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளான, கைகளை அடிக்கடி கழுவுதல், முகக் கவசம் அணிதல், வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 




இதில் அத்தியாவசிய பொருட்களை எப்படி கையாள்வது போன்ற சந்தேகங்கள் மக்களிடம் நிலவி வருகிறது. ஆகவே இது தொடர்பாக மருத்துவர் புருஷோத்தமனை தொடர்பு கொண்டு பேசினோம்.'


அவர் கூறும்போது


1. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அதனை நன்றாக வேகவைப்பதன் மூலம் கொரோனா தொற்றை தவிர்க்கலாம்.

2. பருப்பு, மசாலா போன்ற பொருட்கள் இருக்கும் பாக்கெட்டுகளிலும் கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கத்திரிக்கோல் பயன்படுத்தி மட்டுமே பிரிக்க வேண்டும்.

3. கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வந்த துணிபைகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை வீட்டின் வெளியே வைத்து விட வேண்டும். காலி பாக்கெட்டுகளை தனியாக பிரித்து குப்பையில் போடுவதும் அவசியம்.


4. பழங்களை உப்பு நீரில் கழுவி உண்ண வேண்டும். தோலுடன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.


5. குளியல் சோப்பு மூலம் கைகளை கழுவுவதை தவிர்த்து, சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது நல்லது.


தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு!



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.

*💲📌தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்*

*💲📌தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*

*💲📌தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது*

*💲📌தமிழகத்தில் தற்போது கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு*

*💲📌கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது*

*💲📌தமிழகத்தில் கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன*

*💲📌தமிழகத்தில் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன*

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு :

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு :
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
புதுடெல்லி:
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து,  வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் நேற்று உத்தரவு வெளியானது. 

இந்த நிலையில், மாநிலங்களை விட்டு மக்கள் இடம்பெயராமல் இருக்க  நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில எல்லைகளையும் மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார்.

Recent Posts

Total Pageviews

Blog Archive