10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுக்கூட சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும் தேதி தேர்வுத்துறை அறிவிப்பு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுக்கூட சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும் தேதி தேர்வுத்துறை அறிவிப்பு!

நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 11.03.2020 பிற்பகல் முதல் www . dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD - ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

மேலும் , மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர் , பிறந்த தேதி , மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் , சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி , சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன் .







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive