ஜியோவின் 10 சதவீத பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்க திட்டம்
உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவன மான ஃபேஸ்புக் இந்திய நிறுவனமான ரிலை யன்ஸ் ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் ஒரு பகுதியாக இருந்த ஜியோவை தனி நிறுவனமாக மாற்றி அதன் கீழ் அனைத்து விதமான டிஜிட்டல் வணிகத்தையும் கொண்டு வர நிறுவனர் முகேஷ் அம்பானி திட்டமிட்டி ருந்தார். மேலும் ஜியோ நிறுவனத்தை 2020 மார்ச் 31க்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்தார்.இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனத்தின் மதிப்பு 60 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜியோ நிறுவனத்தின் கீழ் பல்வேறு செயலி கள் செயல்பட்டு வருகின்றன. அவை டிஜிட்டல் யுகத்தில் கணிசமான சந்தையையும் பிடித்துள்ளன.
தற்போது ஃபேஸ்புக் நிறு வனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய் வதன்மூலம் அதன் டிஜிட்டல் வணிகம் அடுத்தகட்டத்துக்கு நகரும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது நாடு முழுவதும் 21 நாட்களுக்கு கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் தொழில் கள் முடங்கியுள்ளன. இந்த நிறுவனங் களுக்கிடையேயான ஒப்பந்தமும் எப்போது நிறைவுபெறும் என்பது தெளிவுபட தெரிவிக்கப்படவில்லை.
0 Comments:
Post a Comment