சாம்பிராணி பயன்படுத்துங்கள்! - இயற்கை மருத்துவர் சொல்லும் யோசனை

சாம்பிராணி பயன்படுத்துங்கள்! - இயற்கை மருத்துவர் சொல்லும் யோசனை
நோய் தொற்று கண்டு நாடே நடுங்கிப்போய் இருக்கும் இவ்வேளையில், சாம்பிராணி பயன்படுத்துவது நல்லது என்கிறார் இயற்கை மருத்துவர் தங்க.சண்முகசுந்தரம். 'தமிழர்கள் வீடுதோறும் சாம்பிராணி புகை போடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. தீமை செய்யும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழிக்கும் சக்தி கொண்டது. இஸ்லாமியர்கள் கூட கடைகளுக்கு சென்று சாம்பிராணி புகை போடுவது வெறும் பிழைப்புக்காக மட்டும் அல்ல. 


மக்களின் நன்மைக்காகவும்தான். ஆகவே, வீடுகளில் சாம்பிராணி புகை போடுங்க. அத்துடன் கூடுதலாக, காய்ந்த வேப்பிலை, வேப்பம்பட்டை போட்டும் புகைய விடலாம். அதே போல, வேப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஊற்றி வீட்டில் விளக்கு ஏற்றி வைக்கலாம். வசம்பினை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் இடுப்புப் பகுதியிலோ அல்லது தங்களது கைகளிலோ அல்லது கழுத்தினிலோ நூல் கயிற்றில் கட்டி வைத்தீர்களானால் நம்மை பாதுகாக்கும். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பாரம்பரியமாக நாம் வசம்பை பயன்படுத்தி வருகிறோம். விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட எளிமையான பல வழிகளில் வசம்பும் ஒன்று. நம்மை காக்க இத்தனை எளிய வழிகள் இருக்க கவலையை விடுங்க. கிருமி நாசினியும் தயாரித்து பயன்படுத்தலாம். 


வேப்பிலையை நீரில் கலந்து கையால் கசக்கி சிறிதளவு கலந்து எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், உப்பு கரைசல், ஆடாதொடா இலை, நொச்சி இலை சேர்த்து பயன்படுத்தலாம்.' இப்படி வீடுகளில் இரசாயண பயன்பாடு இல்லாத எளிமையான இயற்கை கிருமி நாசினியை தயாரித்து பயன்படுத்தலாம் என இயற்கை மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் இது போன்ற நேரங்களில் பின்பற்ற எளிய வழிமுறைகளை கூறுகிறார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive