நாணயங்களில் பெண் ஆளுமைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 9, 2020

நாணயங்களில் பெண் ஆளுமைகள்

நாணயங்களில் பெண் ஆளுமைகள்

நாணயங்களில் பெண் ஆளுமைகள்


திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம்  மகளிர் தினத்தை முன்னிட்டு நாணயங்களில் பெண் ஆளுமைகள் தலைப்பில் அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியினை நடத்தியது.
சிறப்பு விருந்தினராக சென்னை காயின் சொசைட்டி தலைவர் மணிகண்டன் பங்கேற்றார்.
 திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில்,
சர்வதேச மகளிர் தினத்தினை
1975-ம் ஆண்டு
 ஐ.நா. அங்கீகரித்தது.
வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி  உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. உலகளவில் பல நாட்டு நாணயங்களிலும் பெண் ஆளுமைகளை  அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்கள். ஒவ்வொரு மனிதனின் கையில் உலா வருகின்றது நாணயங்கள் பேருந்து கட்டணம் முதல் பொது பயன்பாட்டு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கூட நாணயங்கள் கையில் உலா வருகின்றன.
 ஒரு நாட்டின் இலச்சினையும் மதிப்பும் வட்ட வடிவமான உலோக துண்டில் இருப்பதே நாணயமாக இருக்கின்றது. தற்பொழுது பல்வேறு வடிவங்களிலும் அச்சிடப்படுவது குறிப்பிடத் தக்கது. சுதந்திர இந்தியாவில் பொது பயன்பாட்டு நாணயங்களை தவிர நினைவு போற்றும் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. இவை ஒரு ஆளுமையின் நினைவாக, நிகழ்ச்சியின் நினைவாக  நினைவை போற்றும் வகையில் நாணயங்கள் வெளிவருகின்றன.  அவ்வகையில் சுதந்திர இந்திய நாணயங்களில்
பெண் ஆளுமைகளான அன்னை தெரசா, இந்திரா காந்தி, அல்போன்சா உட்பட பலருக்கு நினைத்த நாணயங்களும்  அச்சிடப்பட்டுள்ளன. மேலும் நாணயங்களில் அனைவருக்கும் உணவு, திட்டமிட்ட குடும்பம், கிராமப் பெண்களின் முன்னேற்றம், விவசாயிகள் உள்ளிட்ட நிகழ்வினை  நாணயங்களில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாயக்கர் காலத்தில் பெண் தெய்வ உருவங்களும் இடம் பெற்றுள்ளன.
சங்ககால நாணய சேகரிப்பாளர் முகமது சுபேர், சுதந்திர இந்திய நாணய சேகரிப்பாளர் இளங்கோவன், விஜயகுமார், அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன. நாணயவியல் சேகரிப்பாளர்கள் நாசர், சந்திரசேகரன், ராஜேஷ், சுவாமிநாதன், மன்சூர், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.












Post Top Ad