பள்ளி தலைமை ஆசிரியை தஞ்சை மாவட்டம் ஓரத்த நாடு கல்வி மாவட்டம் அம் மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது நரியனூர். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கிருட்டினா பேபி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தாக புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டது.
அதன்படி ஓரத்த நாடு கல்வி மாவட்ட அதி காரி பாலசுப்பிரமணியன், அம்மாப்பேட்டை வட்டார கல்வி அதிகாரி மணி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிருட்டினாபேபிபோலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. பணிந்க்கம் இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந் துரை செய்தனர். அதன்பே ரில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தகிருட்டினா பேபி பணிநீக்கம் செய்யப்பட் டார்.
அவர் கடந்த 20 அண் டுகளாக பணியாற்றி வந்துள் ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தலைமை ஆசிரியை கிருட்டினாபேபி, போலிசாதி சான்றிதழ் கொடுத்து பணி யில் சேர்ந்தது குறித்து விசா ரணை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன் பேரில் விசாரணை நடத்தியதில் அது உறுதி செய் யப்பட்டதையடுத்து அவர் மீதுதுறை ரீதியாகநடவடி கை எடுக்கப்பட்டுள்ளது” என்ற னர்.