கொரோனாவை தோற்கடிக்க நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம்! இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

கொரோனாவை தோற்கடிக்க நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம்! இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!
ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கொரானா அச்சம் உலுக்கிக் கொண்டு இருக்கிறது. கொராவை எதிர்கொள்ளவும், தொற்றுநோயான அதன் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் இந்தியா முழுவதும் வரும் 14-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ரயில், பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் கொரானாவில் இருந்து தப்பிக்கவோ, அல்லது எதிர்கொள்ளவோ நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்க வேண்டும். எனவே எந்த உணவு பொருள்களில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகம் எனத் தெரிந்து கொள்வது அவசியம்.



நிலக்கடலை, கொண்டைக்கடலை, மஞ்சள், பட்டாணி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்பு வகைகள், பால் சிட்ரிக் அமிலம், மீன், சிக்கன், முட்டை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழவகைகள், இதேபோல் பீன்ஸ், வெண்டைக்கால், பாகற்காய் போன்ற காய்கறிகளிலும் நோய் எதிர்ப்புசக்தி அதிகளவில் உள்ளது. இதேபோல் பால், தயிர், விட்டமின் சி சத்து நிறைந்த பெரிய நெல்லிக்காய், ஆப்பிள், கொய்யா ஆகியவையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பீட்டா கரோட்டீன் நிறைந்த பப்பாளி, கேரட்ம் நல்ல பலன் கொடுக்கும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.


இதேபோல் வீட்டில் பச்சிளம் குழந்தைகள் இருந்தால் பெற்றோர் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகம் என்பதை தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக இருக்கும். இதையெல்லாம் ரெகுலராக உணவில் சேர்த்து வந்தாலே நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள்தான் கொரோனாவிடம் அகப்பட்டால் கூட குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive