கொரோனா பாதித்தவரை கண்டறியும் புதிய ஆப்!!! மத்திய அரசு அதிரடி

கொரோனா கவச் (Corona Kavach ) ஆப்பை இன்ஸ்டால் செய்த நபரின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவலை பயன்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை நெருங்கும்போது எச்சரிக்கவும் செய்கிறது.
கொரோனா கவச் ஆப் எப்படி வேலை செய்கிறது?
முதலில், ஸ்மார்ட்போனில் தொலைபேசி எண் மூலம் ஆப்பிற்குள் நுழைய வேண்டும். பின்னர் உங்கள் உடல்நிலை, சார்ந்து கேட்கப்படும் கேள்விகளைக் கொண்ட ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த கேள்விகளின் அடிப்படையில், இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும். பச்சை குறியீடு எனில் நலமாக உள்ளீர் என்று காட்டும். ஆரஞ்சு குறியீடு எனில் ஒரு மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தும். மஞ்சள் குறியீடு எனில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தும். சிவப்பு குறியீடு எனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று எச்சரிக்கும்.

ஆப் கீழே மையத்தில் இருக்கும் பட்டனை அழுத்தினால் அருகில் கொரோனா பாதித்தவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டால் எச்சரிக்கும். இந்த ஆப்-ஐ பாதிக்கப்பட்டவர் வைத்திருந்தாலோ, அல்லது பதிவு செய்திருந்தாலோதான் நமக்கு எச்சரிக்கும்
0 Comments:
Post a Comment