மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு மன உளைச்சல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க- ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அரசாணை வெளியிடவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதுஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்திதொடர்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.பெற்றோரும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலை சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மத்தியசுகாதார மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதை கருத்தில்கொண்டு தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசாணை வெளியிடவேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive