கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை:

கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை:


♦♦கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.
♦♦கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது.

♦♦ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறைக்கப்பட்டது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வர் ஓவர்லோட் ஆகாமல் இருக்க முக்கிய நேரங்களில் கேம் பதிவிறக்கம் செய்யும் வேகத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive