Dge - எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!

Dge - எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு!



தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் வகையில் பார்வையில் காணும் அரசாணையின்படி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 02.04.2020 முதல் 09.04.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 02 . 04 . 2020 முதல் 09 . 04 . 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது .

2 . மேற்குறிப்பிட்டவாறு ஒத்தி வைக்கப்படும் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .

3 . சம்பந்தப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கு தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடும்வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்தவேண்டும் .

4 . வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , கட்டுக்காப்பு மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் பணியில் இருப்பதையும் , கட்டுக்காப்பு மையத்தின் பாதுகாப்பினையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive