அரசு பள்ளி Hm - க்கு அமைச்சர் "டோஸ்" - கலக்கத்தில் ஆசிரியர்கள்
கள்ளக்காதல் விவகாரத்தில் இப்பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டது. மாண வர்களை தலைமை ஆசிரியர் நடுரோட்டில் அடித்தது என தொடர்ந்து பல்வேறு புகார்க ளில் சிக்கி வருகிறது. இந்நிலையில். இப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நி கழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பள்ளி வளா கத்தில் எதுவும் செய்யப் படாதது குறித்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் அமைச்சர் அன்பழகன், தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில ஆசிரியர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு புகார்களையும் குற்றச் சாட்டுக்க ளையும் சந்திக்கும் பள்ளி நிர்வாகத்தை தற்போது அமைச்சரும் கண்டித்துள்ளதால் தலைமையாசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
0 Comments:
Post a Comment