P.F. வட்டி வீதம் குறைத்து அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, March 5, 2020

P.F. வட்டி வீதம் குறைத்து அறிவிப்பு

P.F. வட்டி வீதம் குறைத்து அறிவிப்பு!

பி.எப்., எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு 2019-20க்கான வட்டிவிகிதத்தை நிர்ணயிக்க, அறங்காவலர் வாரிய குழு டில்லியில் இன்று (மார்ச் 5) கூடியது. இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பி.எப்.,க்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய குழுவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகம் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2019-20 ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad