அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் 14ந்தேதி விடுமுறை விட முடிவு
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்த சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள் வருகிற 14ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டு பிறப்பும் அன்று வருகிறது.இந்த நிலையில், இந்திய அரசின் துணை செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 14ந்தேதி, நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிப்பது என முடிவாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளது.