நியாய விலைக் கடைகள் மூலம் 19 மளிகைப் பொருள்களை ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 13, 2020

நியாய விலைக் கடைகள் மூலம் 19 மளிகைப் பொருள்களை ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும்

நியாய விலைக் கடைகள் மூலம் 19 மளிகைப் பொருள்களை ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும்
சென்னை: நியாய விலைக் கடைகளில் ரூ.500-க்கு மளிகைப் பொருள்களை விற்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா தெரிவித்தாா்.
தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ஊரடங்கு காலத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களான 2.01 கோடி பேரில் 97.54 சதவீதம் பேருக்கு ரூ. 1000 அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருட்கள் 75.20 சதவீதம் பேருக்கு விலையில்லாமல் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வீடுகளுக்கே சென்று இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல்: தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 70 ஆயிரத்து 620 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா். தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் பல்வேறு கடைகளுக்கு அனுப்படுகின்றன.நடமாடும் வாகனம் மூலமும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பேக்கரிகளில் பொதுமக்கள் அமா்ந்து உண்ணக்கூடாது.
மளிகைப் பொருள்கள்: நியாய விலைக் கடைகள் மூலம் 19 மளிகைப் பொருள்களை ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படும் என்றாா் தயானந்த் கட்டாரியா.

Post Top Ad