கொரானோ ஊரடங்கு நேரத்தில் தொகுப்பூதியத்தில் ₹.2000/- பிடித்தம் செய்வதை கைவிட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை:-
தமிழக அரசுப்பள்ளிகளில் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்...
1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்..2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு (NGO) நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர். தற்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.
NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜீன் மாதம் தொண்டு நிறுவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை 413 வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது..
பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள்
₹.18000 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
மத்திய அரசு தொகுப்பூதியமாக
₹.18000 வழங்கியதை மாநில அரசு தொகுப்பூதியம் ₹.16000 போக்குவரத்து படி
₹.2000 என பிரித்து வழங்கி வருகிறது.
தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக சிறப்பு பயிற்றுநர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பார்வையிட செல்ல முடியாத சூழலில் உள்ளனர்.
இதனால் ஏப்ரல் மாத ஊதியத்தில் ₹.2000 பிடித்தம் செய்து சம்பள பட்டியல்கள் தயாரிக்கப் பட்டு வருகிறது.
தமிழக அரசு தனியார் பள்ளி. மற்றும் நிறுவனங்களில் கூட ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஊதியத்தில் ₹.2000/- பிடித்தம் செய்வது அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. மேலும் உடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் எவ்விதமான பிடித்தங்கள் இன்றி முழு ஊதியம் வழங்கப்படும் நிலையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவைப்பணி செய்துவரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மட்டும் ₹.2000 ஊதிய பிடித்தம் என்பது மாற்றந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.
தமிழக முதல்வர் , கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் எங்களது கோரிக்கையை கனிவோடும் கருணையோடும் பரிசீலித்து புரட்சி தலைவி அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
₹.2000 ஊதியம் பிடித்தம் செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்து முழு ஊதியம் கிடைக்க வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு
(TN - SS - SEADAS) தமிழ் நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.அருண்குமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அனைத்து ஊடக நண்பர்கள் செய்தி நாளிதழ் பத்திரிகை நிருபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பணிவான வேண்டுகோள் எங்களது கோரிக்கை நிறைவேற தங்களது ஆதரவு தேவை எனவே உரிய வகையில் செய்திகளை பிரசுரிக்க அன்புடன் கேட்டு கொள்கிறோம்...நன்றி...!