மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் பெற ஏப். 24,25 தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் தமிழக அரசு ஏற்பாடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 22, 2020

மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் பெற ஏப். 24,25 தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் தமிழக அரசு ஏற்பாடு

மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் பெற ஏப். 24,25 தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் தமிழக அரசு ஏற்பாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஏப். 24,25-ம் தேதிகளில் வீடு களுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்துக்கான இலவச அத் தியாவசிய பொருட்களை விநியோ கிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க நாட்டிலேயே முதன்முறையாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏழை மக்களின் சிரமங்களைஉணர்ந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஊரடங்கு காலம் ஆரம்பிக்கும் முன்பே ரூ.3,280 கோடி மதிப்பி லான சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிடப்பட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தற்போது வரை 1 கோடியே 89 லட் சத்து 1,068 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.ஏப்.15-ம் தேதி முதல் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஏப்.13-ம் தேதியே, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதரரர்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களான தலா ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, சமையல் எணணெய், அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும். இந்த நோக்கில், வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப் படும். அதில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று அத்தியாவசி யப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமு றையை பொதுமக்கள் முறையாக பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்குரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad