அவசரத் தேவைக்காக இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 16, 2020

அவசரத் தேவைக்காக இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

அவசரத் தேவைக்காக இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மே 3 வரை நீட்டித்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கொரோனா தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை குறித்தும் , சில  அறிவிப்புகளையும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

* கொரோனாவுக்கு எதிரொலியாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம்.

* கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால்.

* வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ஆர்.பி.ஐ உறுதிசெய்துள்ளது.

* 2020 - 2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அரிசி, கோதுமை , ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு வராது.

* ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது.

அறிவிப்புகள் :

* வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% இருந்து 3.75% குறைப்பு.

* கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ஏற்பாடு.

* அவசரத் தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம்.




Post Top Ad