7 விதிகளை கடைபிடியுங்கள்: பிரதமர் வேண்டுகோள்

1. வீடுகளில் முதியவர்களை பார்த்து கொள்ளுங்கள். உடல்நலக்குறைவு இருப்பவர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
2. ஊரடங்கு மற்றும் சமூக விலகல் விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். எப்போதும், வீடுகளில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.
3. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் அறிவுரைகளை பின்பற்றுங்கள்.
4. அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களின் உணவு தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியுமா என பார்க்க வேண்டும்.
6. தொழிற்சாலைகளில், ஊழியர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.
7. நமது டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோரை நாம் மதிப்பதுடன், அவர்களது பணிக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.