தமிழகத்தில் கொரோனாவிற்கு தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்.