ஏப்ரல் மாத சம்பளத்தை பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள் மற்றும் அனைத்துவகைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை உரிய நேரத்தில் பெற்று வழங்க ஏதுவாக ஊதியப்பட்டியல் தயார் செய்தல் சார்ந்த கருவூலங்களில் சமர்ப்பித்தல் பணியினை 23.04.2020க்குள் நிறைவுபெறும் வகையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ( DDOS ) மற்றும் மேற்படி அலுவலகங்களில் பணிபுரியும் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் பிரிவு பணியாளர்கள் அரசின் Covid - 19 சார்ந்த உரிய - வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பணியினை மேற்கொள்ளுமாறு ( அலுவலக அடையாள அட்டை அணிந்து செல்லும்படி ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்த விவரத்தை 23.04.2020க்குள் இவ்வலுவலக இணையதளத்தில் ( www.edwizevellore .com ) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.