கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவும் பப்பாளிப்பழம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 6, 2020

கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவும் பப்பாளிப்பழம்

கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவும் பப்பாளிப்பழம்

சென்னை: கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தங்குவதால் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் தீரும்.
இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் நரம்புத் தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்.
கிருமிகளால் நோய் தொற்று ஏற்படாமலிருக்க வாரத்தில் இரண்டு முறை பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் பப்பாளி பழத்தை உண்டு வருவதனால் தீர்வு கிடைக்கப்பெறும்.
பொட்டாசியம் சத்து நிறைந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தத்தை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தங்குவதால் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கத்தை சரி செய்ய முடியும்.

Post Top Ad