வருமானவரி கணக்கு தாக்கல் புதிய மாற்றம்!
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் , தாக்கல் செய்வதற்கான படிவங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
வழக்கமாக , மார்ச் , 31ம் தேதியுடன் முடியும் , வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை , ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் , ஜூன் , 30ம் தேதி வரை , மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது . மேலும் , வரி செலுத்துவதிலும் சில சலுகைகளை அறிவித்துள்ளது .
இந்த ஆண்டு , ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதலீடுகள் , பண பரிமாற்றங்களுக்கான வரி சலுகைகளையும் , வரி செலுத்துவோர் பெறலாம் என , அறிவிக்கப்பட்டுள்ளது.
' இதற்கேற்ப , வருமான வரி கணக்கு தாக்கலுக்கான படிவங்களிலும் , மாற்றம் செய்யப்பட்டு உள்ளது . இம் மாத இறுதியில் , இது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் ' என , மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது .