ரேபிட் டெஸ்ட் கருவி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, April 19, 2020

ரேபிட் டெஸ்ட் கருவி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

ரேபிட் டெஸ்ட் கருவி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

ரேபிட் டெஸ்ட் கருவி கருவி என்றால் என்ன? கொரோனா பரிசோதனையில் அதன் முக்கியத்துவம் என்ன? ரேபிட் டெஸ்ட் கருவி எவ்வாறு செயல்படுகிறது?

கருவுற்று இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பெண்களுக்கு உதவும் கருவியைப் போல் இருக்கும் பொருள் தான், ரேபிட் டெஸ்ட் (RAPID TEST) கருவி. விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு ரத்தம் போதும், உடலில் கொரோனா வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பதற்கான அறிகுறியை மட்டுமே காட்டும்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “நமது உடலில் கொரோனா வைரஸ் நுழைந்தால், அதனை எதிர்த்து போரிட ரத்தத்தில் ஆண்டிபாடி எனும் பிறபொருளெதிரி உருவாகும். அவ்வாறு பிறபொருளெதிரி உருவாகியுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கே RAPID TEST கருவி பயன்படுத்தப்படுகிறது.

அதாவது கொரோனாவுக்கு எதிரான பிறபொருளெதிரி நமது ரத்தத்தில் உருவாகி இருந்தால், அந்த கருவியில் 2 சிவப்பு நிறக் கோடுகள் காட்டும். அது பாஸிட்டிவ். அப்படியானால் நமக்கு கொரோனா இருப்பதாக அர்த்தம் இல்லை. ஆனால், அதற்கான வாய்ப்பு உள்ளதாக அர்த்தம். அதேசமயம் ரத்தத்தில் கொரோனாவுக்கு எதிரான பிறபொருளெதிரி இல்லாவிட்டால், RAPID TEST கருவியில் ஒரேயொரு சிவப்பு நிறக் கோடு மட்டுமே காட்டும். அது நெகட்டிவ். அப்படியானால் கொரோனாவுக்கான அறிகுறி இல்லை என நிம்மதியடையலாம்.

இது குறித்து மருத்துவர் புருஷோத்தமன் கூறும் போது, “ஹாட் ஸ்பாட் பகுதிகளில் இந்த ரேபி கிட்ஸ் பெரும் உதவியாக இருக்கும். இந்த RAPID TEST கருவி முதல் நிலை சோதனைக்கு மட்டுமே. மேலும் அடுத்தகட்ட சோதனைகளுக்கு நாம் ரியல் டைம் PCR பரிசோதனைகள் செய்யப்படும்” என்றார்.

RAPID TEST கருவியில் மேற்கொள்ளப்படும் சோதனை முடிவை சுமார் 15 நிமிடங்களிலேயே அறிந்து கொள்ள முடியும். ஒரு கருவியை 600 ரூபாய்க்கு தமிழக அரசு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த RAPID TEST கருவி முதல் நிலை சோதனைக்கு மட்டுமே. இந்த சோதனையில் "பாஸ்ட்டிவ்" என முடிவு வரும்பட்சத்தில், உடனடியாக கொரோனாவை உறுதிபடுத்தும் ரியல் டைம் PCR பரிசோதனை செய்யப்பட்டு, நோயாளிக்கு உடனடியாக சிகிச்சையை விரைவுப்படுத்த முடியும்.

Post Top Ad