ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த முனைவர் ஈவோ என்பவர் இலுப்பூரில் செயல்பட்டுவரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சமூகவியல் மற்றும் வேளாண் மையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று அந்நிறுவனத்திலேயே தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார் இவர் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இலுப்பூர் பேருந்து நிலைய காய்பறி சந்தைக்கு வருகைதந்து சமூக இடைவெளியினை பின்பற்றி காய்கறி வாங்கியதோடு அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் சமூகவிலகலை பின்பற்ற வலியுறுத்தினார்.பின்னர் அங்கு சமூக விலகலை பின்பற்ற வலியுறுத்தும் தன்னார்வலர்களாக பணிபுரிந்த இலுப்பூர் கல்வி மாவட்டப்பள்ளித்துணை ஆய்வாளர் திரு கி.வேலுச்சாமி,ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு மகேந்திரன் மற்றும் தன்னார்வலர்களையும் பாராட்டியதோடு பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்ற சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ள காவல்துறை உள்ளிட்ட மத்திய,மாநில அரசு நிர்வாகத்தினரையும் பாராட்டிச்சென்றார்..