சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கவில்லை வேலூர் சி.எம்.சி. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கவில்லை என்று வேலூர் சி.எம்.சி. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு நீட் தேர்வு முறையை அறிவித்தது.இதையடுத்து, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில், நீட் தேர்வு இருப்பதாக வேலூர் சி.எம்.சி., மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தன.
ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் எனவும், மனுக்கள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து மனுக்கள் அனைத்தும் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினித் சரண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுநேற்று இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுகள் சமூக அமைப்பில் நடைமுறையில் உள்ள சீர்கேடுகள் மற்றும் பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.நீட் தேர்வு முறை வலியுறுத்தும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மதம் அல்லது மொழி சார்ந்த சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களின் நிர்வாக முறைகளில் எந்த வகையிலும் குறுக்கிடவில்லை.
இது எந்த வகையிலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையிலும் இந்த தேர்வுகள் இல்லை. எனவே இந்த அடிப்படையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.