தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.
கொரோனா இன்று உலகையே முழுவதும் முடக்கியுள்ள நிலையில் பள்ளி , கல்லூரிகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிய நிலையில் தொடர்கிறது.மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதன் பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.
அதில், பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும், பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவியர்களுக்கு ஷூ, சாக்ஸ், பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.