கொரோனா தொடர்பான சான்றிதழ் - உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா தொடர்பான சான்றிதழ் - உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை
கொரோனா தாக்கி மீண்டவர்களை, இரண்டாவது முறையும் அந்த வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஒருமுறை கொரோனா தாக்கி மீண்டவர்களின் உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆன்ட்டிபாடிகள் இருக்கும். அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ, பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என்று சில நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன.இந்த கருத்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததோடு, இதுபோன்ற செயல்கள் பொது சுகாதார விதிமீறல் மற்றும் நோய் பரப்பும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது..மேலும் ஒருமுறை கொரோனா தாக்கி மீண்டவர்களை இரண்டாவது முறையாக அந்த வைரஸ் தாக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் உடலில் ஆன்ட்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive