தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 29, 2020

தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு

தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் மட்டும் வழங்கும்படி, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் 1,564 கணினி ஆசிரியா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனா். அவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, 2020 ஜனவரி முதல் டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி செயலருக்கு, பள்ளி கல்வி இயக்குநா் தரப்பில் கருத்துரு அனுப்பப்பட்டது.

இந்த கருத்துரு பரிசீலனையில் உள்ளதாகவும் தற்காலிக ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு தேவையா என்பதற்கான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பணி நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் மட்டும் வழங்க, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா்.

Post Top Ad