தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!
குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் , ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறிவித்துள்ளது .
இது தொடர்பாக , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
( டிஎன்பிஎஸ்சி ) இன்று ( ஏப் . 7 ) வெளியிட்ட அறிவிப்பில் ,
" தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09 . 12 . 2019 நாளிட்ட அறிவிக்கை எண் 34 / 2019 இல் 25 . 04 . 2020 மற்றும் 26 . 04 . 2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த , தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் , குறு , சிறு
மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வானது , கரோனா வைரஸ் பரவலால் கடைப்பிடிக்க வேண்டிய சமூக விலகல் காரணமாகவும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.