கல்லூரி மாணவா்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி: யுஜிசி முடிவு
நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதல், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவா் என யுஜிசி தெரிவித்துள்ளது.
யுஜிசி புதன்கிழமை வெளியிட்ட புதிய கல்வியாண்டுக்கான இறுதி செய்யப்பட்ட வழிகாட்டுதல்களின் விவரம்: கரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களை தவிர இதர பகுதியில் உள்ள பல்கலை, கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவாா்கள். அதேநேரம் இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படும். கரோனா பாதிப்பு காலங்களில் விரைவாக முடிவெடுக்க யுஜிசி சாா்பில் சிறப்பு மையம் அமைக்கப்படும். அதேபோல், அனைத்து பல்கலை.களிலும் மாணவா்களுக்கு வழிகாட்ட உதவி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். வரும் கல்வியாண்டில் 2, 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்திலும், முதலாண்டுக்கான வகுப்பை செப்டம்பரிலும் தொடங்க வேண்டும். நிகழாண்டு இழப்பை ஈடுசெய்ய 2020-21-ஆம் கல்வியாண்டில் பல்கலை.கள் 6 நாள் வாரமுறையை பின்பற்றலாம் என்பன பல்வேறு உள்ளிட்ட அம்சங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.