அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்ட ஆலோசனையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.