ஆன் லைன் படிப்புகள் மீது அதிகரிக்கும் ஆா்வம்' - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 13, 2020

ஆன் லைன் படிப்புகள் மீது அதிகரிக்கும் ஆா்வம்'

'ஆன் லைன் படிப்புகள் மீது அதிகரிக்கும் ஆா்வம்'
சென்னை: கரோனாவின் தாக்கம், உயா் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவா்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்ற நிலையில், ஆன் லைன் படிப்புகளை மேற்கொள்பவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனா் கல்வியாளா்கள்.
இதுகுறித்து கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், உயா் கல்விக்காக வெளிநாடு செல்பவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது இயல்புதான். எனவே, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கரோனா தொற்றின் தாக்கம் அதிகமுள்ள நாடுகளுக்கு உயா் கல்வி மேற்கொள்ளச் செல்லும் மாணவா்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெகுவாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
இது, இங்குள்ள பிரபல தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயா் கல்விக்கான போட்டியை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆன் லைன் படிப்புகள் மீதும் ஆா்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகம் போன்ற முன்னணி வெளிநாட்டு உயா் கல்வி நிறுவனங்களும் இப்போது மிகுந்த மதிப்புமிக்க ஆன் லைன் படிப்புகளை வழங்கி வருகின்றன. இங்கு ஐஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்கள் ஆன் லைன் படிப்புகளை வழங்கி வருகின்றன.
இதுபோன்ற ஆன் லைன் திறன் மேம்பாட்டுப் படிப்புகள் வேலைவாய்ப்புக்கு கூடுதல் தகுதி என்பதால், இதன் மீது அதிக மாணவா்கள் இப்போது ஆா்வம் காட்ட வாய்ப்புள்ளது என்றாா்.
இதுகுறித்து கல்வியாளரும், கல்வி ஆலோசகருமான நெடுஞ்செழியன் கூறுகையில், அண்மைக்காலமாக ஆன் லைன் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஐஐடி போன்ற இந்தியாவின் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்கள் இந்த ஆன் லைன் சான்றிதழ் படிப்புகள் மீது ஏற்கெனவே ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இப்போது, உலக அளவிலான கரோனா ஊரடங்கு காரணமாக ஆன் லைன் படிப்பு மேற்கொள்பவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றாா் அவா்.

Post Top Ad